Home » 2016 » March (page 9)

Monthly Archives: March 2016

மனதைத் தொட்ட உண்மைக் கதை!!!

மனதைத் தொட்ட உண்மைக் கதை!!!

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர். ரெடி, ஸ்டிடி, கோ விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர். ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர். அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து ... Read More »

இதை விடப் பகை எது ?

இதை விடப் பகை எது ?

ஆபீஸை விட்டு வெளியே வரும் போது மழை சோ வெனப் பெய்யத் தொடங்கியது. ஏற்கனவே பாஸிடம் திட்டு வாங்கியதில் மூடு-அவுட் ஆகியிருந்த மாறன் இன்னும்எரிச்சலடைந்தான். இன்றைக்கு பார்த்து குடை கொண்டுவர மறந்து விட்டான்.நனைந்து ஈரமாகி விட்ட உடம்பை வேகமாக வீசிய குளிர் காற்று நடுங்க வைத்தது.எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தேங்கியிருந்த சேற்றை வாரி தலை முதல் கால் வரை இறைத்து விட்டுப் போய் விட்டது. ஆட்டோக் காரனை திட்டிக் கொண்டேகோபத்தின் உச்சத்தில் வீட்டிற்குள் நுழைந்தான். ஏங்க குடையை எடுத்து ... Read More »

சும்மா இருப்பது எப்படி?

சும்மா இருப்பது எப்படி?

ஒரு மடத்தில் “சும்மா இருப்பது எப்படி?” என செய்முறை விளக்கம் தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார். எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். சிலர் பேசாமலும், சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள். இன்னும் சிலர் மலைகள், காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த ... Read More »

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………

அவள் ஒரு கிராமத்து அம்மா…… நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்…… என்னிடம் வந்தாள்…..” ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதியபோன்…” நான் சொன்னேன்:” அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்…..சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்…. அதற்கு அந்த அம்மா:_” இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது…..” எவ்வளவு பெருமிதம்……. அந்த அம்மா முகத்தில்…… என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்……மாசம் ஒரு தடவை பேசுவான்……… இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை….. அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு ... Read More »

வாழ்க்கை ஒரு பயணம்!!!!

வாழ்க்கை ஒரு பயணம்!!!!

வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது”என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள். வெறுமனே தூங்கிக் கொண்டு போவதும், பேசிக் கொண்டே போவதும் பயணத்தில்சேர்க்கலாகாது. பயணத்தை கொண்டாட தேவை “கவனம்”. இந்தக் கவனம்தான் பலவெற்றிகளை அறிமுகப்படுத்துகிறது. வாழ்க்கையே ஒரு பயணம் தானே! ஒரு செழித்த நாடு! அந்த நாட்டின் அரசன் தினமும் காலையில் யானையில் அமர்ந்து ஊர்வலம் வருவான். அப்படி வருகிறபோது, ஊரின் ஒரு மூலையிலிருந்து ஓடோடி வரும் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பான். யானையால் நகரமுடியாது. ஒரு சில ... Read More »

ஆளுக்கொரு அறிவுரை

ஆளுக்கொரு அறிவுரை

ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான். பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார். ராமகிருஷ்ணர் அவரிடம், “”நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்,” என்றார். மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான்.விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப்போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான். இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் ... Read More »

எது நிரந்தர இன்பம்?

எது நிரந்தர இன்பம்?

ஒரு அரசனை நாடி புலவர் ஒருவர் வந்தார். அன்றைய புலவர்கள், அரசனின்பெருமைகளைப் புகழ்ந்து பாடுவதும், அதற்கு அவர்கள் பரிசு கொடுப்பதும் வழக்கம். இந்தப் புலவர் கடவுளை மட்டுமே அதுவரை பாடியவர். ஆனால், கோயிலில் குடும்பத்தைக் காப்பாற்றுமளவு போதுமான சம்பளம் கிடைக்காததால், அரசனைப் புகழ்ந்து பாட வந்துவிட்டார். அவனைப் புகழ்ந்து பாடினார். அவனும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி ஆட்டி ரசித்தான். பாடி முடித்ததும், அமைச்சரை அழைத்து, “”இந்த புலவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதற்காக இவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுங்கள்,” என்று உத்தரவிட்டான். புலவர் அமைச்சருடன் சென்றார். அமைச்சரோ,””சரி…போய் வருகிறீர்களா?” என்றார். “”அமைச்சரே! அரசன் தரச்சொன்ன ... Read More »

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள். 2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான். 3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும். 4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும். 5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது. 6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது. 7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். 8. ... Read More »

தர்மத்திலுமா சிக்கனம்!

தர்மத்திலுமா சிக்கனம்!

ஒரு பணக்காரர் துறவியிடம் போனார். அவரிடம், “”மகனே! உனக்கு கிரகநிலை சரியில்லை. இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு. நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய். பிரச்னை குறையும்,” என்றார். பணக்காரரோ பெரிய கருமி. “”பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே! என்ன செய்யலாம்?” என யோசித்தவர் வேலைக்காரனை அழைத்து, “”நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும் நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்து வா,” என்றார். அவனும் ஐந்தாறு பழங்களைப் பறித்து வந்தான். அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர். “”வீட்டுக்கு போவதற்குள் ... Read More »

இயற்கையை மாற்ற முடியாது!

இயற்கையை மாற்ற முடியாது!

ஒரு சமயம் மூன்று ரிஷிகள் வான் வழியே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து ஒரு கருடன் பறந்து சென்றது. அதன் வாயில் ஒரு பாம்பு சிக்கியிருந்தது. “”அடடா…இந்த கருடனுக்கு கொஞ்சமாவது இரக்கமிருக்கிறதா! பாம்பை இந்தப் பாடு படுத்துகிறதே!” என்றார் ஒரு ரிஷி. அவ்வளவு தான்! பறந்து கொண்டிருந்தவர் கீழே விழுந்து விட்டார். இன்னொருவர், “”இந்த பாம்பு இதுவரை எத்தனை பேரைத் தீண்டி உயிரைப் பறித்திருக்கும். இதற்கு இது தேவை தான்!” என்றார். அவரும் கீழே விழுந்தார். மூன்றாவது ரிஷியோ, “”இவையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். கருடன் பாம்பைப்பிடிப்பதும், பாம்பு மனிதனைத் தீண்டுவதும் ... Read More »

Scroll To Top