கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். 3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி ... Read More »
Monthly Archives: March 2016
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
March 29, 2016
* நம்மை வழிநடத்தும் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிவது ஒன்றே கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம். * எறும்பு சுயநலமில்லாமல் தன் இனத்தோடு கூடி வாழ்கிறது. நாமும் ஒற்றுமைஉணர்வுடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை அடைவோம். * ஒரு பெரிய மரத்தையே கரையான் அரித்து விடுவது போல, தீயகுணத்தால் மனம் அடியோடு அழிந்து போகும். * நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. உண்ணும் உணவு ஜீரணமாகி உடலோடு கலப்பது போல, மனதால் நல்லதை உள்வாங்கி செயலிலும் காட்ட வேண்டும். * வாழ்க்கை நாணயம் போன்றது. ... Read More »
மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? தீர்வு!!!
March 29, 2016
சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், ‘தீர்வு’ பிறந்து விடும். “மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில்உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறதாம் மனச்சோர்வு! ஒரே அறைக்குள் அடைந்து கிடங்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது. கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ-பரபரப்பாக நடைபழகி ... Read More »
வெள்ளைப் பூண்டு மருத்துவம் :-
March 29, 2016
சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது. இந்த வாரம் பூண்டிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா? * பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம். * வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 ... Read More »
ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு
March 29, 2016
சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும் சொல்லத் தோன்றும். உண்மையில்,சேவையின் தரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம். ஏனென்றால்உற்பத்தியான பொருள், வாடிக்கையாளரைச் சென்று சேர்வதற்கு முன்பாக“பரிசோதனை இடைவெளி” உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியில் குறையிருந்தால்,அந்த பொருளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து வெளியே அனுப்பவாய்ப்புண்டு. ஆனால், சேவைத் துறை அப்படியல்ல. சேவை, வாடிக்கையாளர் முன்புதான்வெளிப்படுகிறது. வெளிப்படும் கணமே வாடிக்கையாளரைச் சென்றடைகிறது. எனவே,சேவையின் தரத்தைக் கட்டிக் ... Read More »
சில பாட்டி வைத்தியம்-1
March 29, 2016
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். ———————————————————————————– வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். ———————————————————————————- உணவு சாப்பிடுவதற்கு அரை மணி ... Read More »
முயன்றால் தான் முடியும்…அட ஆமாயில்ல!
March 29, 2016
பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப் போல் தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் அவன் இவ்வுலகில் மனிதனைப் போல நடக்க மட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. – டாக்டர் ராதாகிருஷ்ணன் நீங்கள் எவ்வளவு புயல்களை சமாளித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டப் போவதில்லை. கப்பலைப் பத்திரமாக துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பதைத் தான் உலகம் அறிய விரும்புகிறது. -வில்லியம் மெக்ஃபி கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது. – நார்மன் வின்செண்ட் ... Read More »
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை எளிதில் போக்க சில டிப்ஸ் :-
March 29, 2016
கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருப்பான வட்டங்களைத் தான் கருவளையங்கள் என்று சொல்கின்றனர். இந்த கருவளையங்கள் என்பது இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை இல்லை. மேலும் மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் ஒன்றும் மிகப்பெரிய பிரச்சனை இல்லை. உருளைக்கிழங்கு :- உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து ... Read More »
பொதுவாச் சொல்றேன்!!!
March 29, 2016
யாராவது நல்ல குணங்களோட இருக்கார்னு வைச்சுக்குங்க, “பழக்கம்னா அப்படிப்பழகணும்பா” அப்படீன்னு பாராட்டிச் சொல்றது பழக்கம். இல்லீங்களா! நான் பொதுவாச் சொல்றேன், நல்லதா ஒண்ணைக் கத்துக்கணும்னா அதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு. இப்ப, மேலை நாடுகளிலே ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காங்க. என்ன தெரியுங்களா? ஒரு பழக்கம் நம்மகிட்டே படியணும்னா குறைஞ்சது 21 நாட்கள் ஆகும் அப்படீங்கிறாங்க.உதாரணமா, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பறாங்க இல்லியா? அப்போ, முதலிலேஎரிபொருள் அதிகம் செலவாகுது. ஆனா போகப்போக அவ்வளவு ஆகறதில்லே. அதாவது ஒரு காலகட்டத்துக்குப் பிறகு எரிபொருளைக் குறைவா பயன்படுத்தினா போதும்ங்கிற பழக்கம் ராக்கெட்டுக்கு ஏற்படுது. மனிதர்களும், ஒரு நல்ல பழக்கத்தைப் பழகணும்னா அதுக்குன்னு கொஞ்சம் பயிற்சி ... Read More »
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை :-
March 29, 2016
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். ... Read More »