விஷம் இறங்க… கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும். பெண்கள் இடுப்பில் புண் குணமாக… பெண்கள் இடுப்பில் புடவை கட்டும் இடத்தில் இறுக்கி கட்டுவதால் ஏற்படும் புண் கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க… முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றினால், வயிற்று உப்பிசம், மலக்கட்டு ... Read More »
Monthly Archives: March 2016
ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு
March 8, 2016
சிலரைப் பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்களது முகத்திலும் ஒரு பிரகாசம் தெரியும். இன்னும் சிலர் இருக்கிறார்கள்; என்னத்த செஞ்சு… என்னத்த நடக்க… என்று எப்போதும் படுசோம்பேறிகளாக இருப்பார்கள். இந்த இரு தரப்பினரில் யாருக்கு ஆயுள் அதிகம் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையறைக்கு செல்லும் வரை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது பற்றிய கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. ஆய்வின் ... Read More »
கடவுளையும் கட்டலாம்!
March 8, 2016
எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால், “முடியும்’ என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். “முடியாது’ என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன். ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டு விட வேண்டும் என நினைத்து காட்டில் தவமிருந்தார். ஒருநாள் ஒரு வேடன் வந்தான். அவன் ... Read More »
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி
March 8, 2016
உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக ... Read More »
குழந்தைகளும், கம்ப்யூட்டரும்… சில பாதுகாப்பு டிப்ஸ்!
March 8, 2016
”என் புள்ள செல்போன், கம்ப்யூட்டரே கதியா கிடக்குறான். ஆனா, அதுல என்ன பண்ணுறான்னு மட்டும் எங்களுக்கு எதுவுமே தெரியல… என்று புலம்பும் பெற்றோர், இன்றைக்கு அதிகம் ஆகிவிட்டார்கள்..’’ என்று சொல்லும் சென்னை, லயோலா கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் நெஸ்டர் ஜெயகுமார், பெற்றோர்களுக்கு டிப்ஸ்களை அள்ளி வழங்கினார். அவை… குழந்தைகளை தனியறையில் அமர்ந்து கம்ப்யூட்டரை பயன்படுத்த அனுமதிக்காமல், ஹாலிலோ அல்லது உங்களது பார்வையில் படுகிற இடத்திலோ அனுமதியுங்கள். குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் தேவையான, பயன்படக்கூடிய சாஃப்ட்வேரை ... Read More »
இத்தனை தலைவலிகளா?
March 8, 2016
இத்தனை தலைவலிகளா? அடிக்கடி மாத்திரை விழுங்காதீங்க : தலைவலி – இது இல்லாதவர்கள் வெகு குறைவு தான். அப்படி தலைவலி வந்தால், மாத்திரை விழுங்காதவர்கள் குறைவு; ஆண்டுக்கணக்கில் மாத்திரை விழுங்குவோர் இருக்கத் தான் செய்கின்றனர். உடல் கோளாறினால் ஏற்படும் தலைவலி முதல், டென்ஷன் மூலம் வரும் தலைவலி வரை பல தலைவலிகள் உள்ளன. இதைப் போக் கிக்கொள்ள இரண்டு வழிகள்; சாதாரண தலைவலி என்றால் அடிக்கடி வராது; அடிக்கடி வரும் தலைவலி என்றால் டாக்டரிடம் காட்டிவிடுவதே நல்லது. ... Read More »
COIMBATORE
March 8, 2016
என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!. தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; மதுரையைக் கடக்கிறது வைகை; நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; திருச்சியிலே “பெல்’ (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது; என்னதான் இருக்கிறது இந்த கோவையில்…?. வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, “குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்’, மக்கள் வாழத்தகுதியே ... Read More »
கேம்பஸ் இன்டர்வியூ சில உண்மைகள்… சில எச்சரிக்கைகள்!
March 7, 2016
‘கேம்பஸ் இன்டர்வியூ’ – இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்! ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். ... Read More »
ஆசைகளை சீர்படுத்துங்கள்
March 6, 2016
ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம். * உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை. * மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் ... Read More »
தமிழ் வார்த்தைகள்
March 6, 2016
தமிழில் டீக்கு “தேநீர்’, காபிக்கு “குளம்பி’ என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி – கோந்தடை புரோட்டா – புரியடை நூடுல்ஸ் – குழைமா கிச்சடி – காய்சோறு, காய்மா கேக் – கட்டிகை, கடினி சமோசா – கறிப்பொதி, முறுகி பாயசம் – பாற்கன்னல் சாம்பார் – பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி – தோய்ச்சி, மாவேச்சி பொறை – வறக்கை கேசரி – செழும்பம், பழும்பம் ... Read More »