அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள். மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார். “”உமது கருத்து என்ன?” என ... Read More »
Monthly Archives: March 2016
அறியாததை அறிந்திடுவோம்: கோவில்களில் தரிசன முறை!!!
March 14, 2016
இந்த பதிவில் சிவன் கோவிலுக்கு சென்று தரிசிக்கும் முறை பற்றி குறிப்பிட உள்ளேன். கோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்ப்படும் மன நிறைவும்தான் முக்கியம். இதில் வழிபட ஒரு கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் நம் முன்னேர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன்படிதான் ஆகம விதிப்படி கோவில்கள் பழங்காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோவில்களை தரிசனம் செய்யும் முறையும் விளக்கப் பட்டுள்ளது. நாம் முதலில் சிவன் கோவில் தரிசனம் செய்யும் முறையை விரிவாக காண்போம். ... Read More »
மார்டின் லூதர் கிங்
March 14, 2016
“வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கின்றது” (violence begets violence) என்கிற சொற்தொடரை Dr மார்டின் லூதர் கிங் அவர்கள் 1958 இல் தனது உரையில் பயன்படுத்தினார். அறவழிப் போராட்டத்தை தொடர்பவர்களின் முக்கிய கருத்துரு. “வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. சகோதரத்துவத்தை ... Read More »
புதிய ஆத்திசூடி !!!
March 14, 2016
காப்பு ஆத்தி சூடி யிளம்பிறை யணிந்து மோனத் திருக்கு முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன், மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர் உருவகத் தாலே யுணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே , அதனியல் ஒளியுறு மறிவாம், அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார், அதனருள் வாழ்த்தி யமரவாழ் வெய்துவோம். நூல் அச்சந் தவிர் ஆண்மை தவறேல் இளைத்த லிகழ்ச்சி ஈகை திறன் உடலினை யுறுதிசெய் ஊண்மிக ... Read More »
ஓடி விளையாடு பாப்பா
March 14, 2016
ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா – ஒரு குழந்தையை வையாதே பாப்பா. பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும் புறஞ் சொல்ல லாகாது பாப்பா தெய்வ நமக்குத் துணை பாப்பா – ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா. தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தி லினியதடி பாப்பா – எங்கள் ஆன்§ர்கள் தேசமடி பாப்பா. சாதிக ளில்லையடி பாப்பா – ... Read More »
பாரதியார்…சுயசரிதை!!!
March 14, 2016
1. கனவு “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.” ___ பட்டினத்துப்பிள்ளை முன்னுரை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்; தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்; பாழ்க டந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை; ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ? உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன் 1 மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை ... Read More »
தேன் மருத்துவ குணமும்….
March 13, 2016
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும். 3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை ... Read More »
கலையும், அறிவியலும் மருத்துவம்
March 12, 2016
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும். 1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும். 2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம். ... Read More »
அடுத்தவர் குறைகள்!
March 12, 2016
அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் ... Read More »
அபிலீன் பரடொக்ஸ் பற்றி…
March 12, 2016
அபிலீன் பரடொக்ஸ் ? (Abilene Paradox !!): ஜோர்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jerry B. Harvey என்கிற மேலாண்மைத் துறை பேராசியர் தனது கட்டுரையில் அபிலீன் பரடொக்ஸ் பற்றி… “வெயில் நிறைந்த பிற்பகல் வேளையில் டெக்சாஸ் மாகாணத்தின் Coleman பகுதியில் ஒரு குடும்பத்தினர் டோமினோ விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மாமனார் இரவு உணவுக்கு (53 மைல்கள் தொலைவில் உள்ள) அபிலீனுக்குச்(Abilene) செல்லலாம் என்று கருதுகிறார். அவரது மகளும் இது நல்ல திட்டமாகத் தெரிகிறது என்கிறார். மருமகனுக்கு அபிலீன் ... Read More »