பீர்பாலின் மகள் ஐந்து வயதுப் பெண்; மிகவும் சாதுர்யமாகப் பேசுவாள். ஒரு நாள் தானும் அரண்மனைக்கு வருவேன் எனத் தந்தையிடம் அடம் பிடித்தாள்: பீர்பாலும் மறுக்க முடியாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரசரைப் பார்ப்பது அதுவே முதல் முறை. ஆனாலும் சிறுமி மிகவும் மரியாதையோடு, அரசரை வணங்கிவிட்டு நின்று கொண்டிருந்தாள். அக்பர் பிரியத்தோடு சிறுமியை அருகில் அழைத்து, “குழந்தாய், உனக்கு ஏதேனும் சொல்லத் தெரியுமா?” என விசாரித்தார். “ஓ! எனக்கு நிறையவும் குறையவும் பேசத் தெரியுமே” என்று ... Read More »
Monthly Archives: March 2016
ராஜ யோகம் பகுதி-1
March 17, 2016
நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம். நிச்சய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றுள் உள்ள உண்மையை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் அது ஒவ்வொருவருடைய தனி அனுபங்களை ஒத்திருக்கிறது. தான் கூறும் எதையும் நம்புமாறு விஞ்ஞானி சொல்வதில்லை. அவன் தனது சொந்த அனுபவங்களிலிருந்து சில முடிவுகளைக் கண்டறிந்துள்ளான். ஆராய்ந்த பின்னரே அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு அவன் ... Read More »
பல்சுவை!!!
March 16, 2016
கவலைப்பட வேண்டாம் பெரிய மரத்தின் மீதுதான் புயற்காற்று மோதுகிறது: கிளறிவிடுவதனால் நெருப்பு மேலும் நன்றாக எரிகிறது; தலையில் அடிபட்ட பாம்பு படமெடுக்கிறது என்று இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நெஞ்சுபுண்பட்டு வேகும்போதும் துன்பப் புயல் நம்மைச் சுற்றி நாலா புறங்களிலும் வீசும்போதும் இனி வாழ்க்கையில் ஒளியையே காண முடியாதா என்று தோன்றும்போதும். நம்பிக்கையும் துணிவும் கிட்டத்தட்ட அறவே நம்மை விட்டு அகன்று விட்ட போதும் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆன்மிகப் புயல் சூழ்ந்த நிலையின் நடுவில்தான் பிரம்மத்தினுடைய ... Read More »
நமது தாய்நாடு!!!
March 16, 2016
இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.சமுதாயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும், எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தொய்மாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம் பலாத் காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய ... Read More »
சிரிக்க வைத்தால் பரிசு!!!
March 16, 2016
ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று கூறினார். என்னனென்னவோ சொல்லி, முயன்று பார்த்தார் பீர்பால். அக்பர் சிறிதும் அசையாமல், சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். கடைசியாக, ஒரு தந்திரத்தைக் கையாளத் தொடங்கினார் பீர்பால். அக்பருடைய காதில், ‘இப்பொழுது நீங்கள் சிரிக்காவிட்டால், நான் என்ன செய்வேன் தெரியுமா? உம். என் விரல்களால் உங்கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச்சத்தை உண்டாக்குவேன்’ என்று குசு குசு வென்று ... Read More »
தந்தைக்கு குழந்தை பிறந்தது!!!
March 16, 2016
அக்பர், பீர்பாலிடம் ‘நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை மாட்டுப் பால் வேண்டும், என்று கூறினார். அப்படியே ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார் பீர்பால். ‘எத்தனை நாளானாலும் சரி, எனக்குக் கிடைத்தால் போதும்’ என்றார் அக்பர். வீட்டுக்கு வந்தார் பீர்பால்; தம் மகளை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு, யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம் எனவும் அரசர் ... Read More »
இறைவன் அளித்த பரிசு!!!
March 16, 2016
அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர். தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார். சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். ”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ... Read More »
மக்களின் தொண்டே மகேசன் தொண்டு!!!
March 15, 2016
ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு, அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும்.இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும்…… இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு ... Read More »
உபதேச மொழிகள் தேவையா?
March 15, 2016
சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும், இவ்வாறு அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமானது. ஒரு நாள் அக்பர் பீர்பால் மீது கோபம் கொண்டு, உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு விட்டார். பீர்பாலும் அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தம்முடைய விசுவாசமுள்ள பணியாளுடன் நாட்டை விட்டுப் புறப்பட்டார். வழியில் வேறு ஒரு நாட்டை அடைந்து அங்கே தங்கினார்கள். அந்நாட்டின் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்து ... Read More »
செல்வம் நம்மோடு இருக்கட்டும்!!
March 15, 2016
அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர். செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான். பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்: “நாளை ... Read More »