நான்காம் நாள் நான்காம்நாள் என்னை நயவஞ்சனைபுரிந்து வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள் மெய்ம்மை யறிவிழந்தென் வீட்டிலே, மாடமிசை சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், 5 எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம் மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே, காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால், வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும் யானதனைக் கண்டே; ‘இது நமது பொய்க் குயிலோ?’ 10 என்று திகைத்தேன்; ‘இருந்தொலைக்கே நின்றதனால் நன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம் ஆங்கதனை விட்டுப் ... Read More »
Monthly Archives: March 2016
வல்லவனுக்கு வல்லவன்!!!
March 24, 2016
மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது அரசாங்க ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார். விகடகவி பாலா அரசாங்க ஆலோசகராக இருப்பது அரண்மனை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொறாமையை உண்டு பண்ணியது. விகடகவியை எப்படியாவது அரண்மனையை விட்டே ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் முடிவெடுத்தனர். அன்று மன்னர் சபையில் அறிஞர் பெருமக்கள் பலரும் வீற்றிருந்தனர். அப்போது அரசபை மன்றத்திற்கு அயல்நாட்டு அறிஞர் ஒருவர் வந்தார். ... Read More »
பாரதியார் கவிதைகள் – நெஞ்சு பொறுக்கு திலையே!!!
March 24, 2016
நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) மந்திர வாதி என்பார் – சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், யந்திர சூனி யங்கள் – இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே ... Read More »
பெண்கள் விடுதலைக் கும்மி!!!
March 24, 2016
காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம்பாடக் கண்களி லேயொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே. 1. கும்மி யடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் ... Read More »
தெனாலி ராமன் – ராஜகுருவின் நட்பு!!!
March 24, 2016
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் “சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் ... Read More »
பாப்பாப் பாட்டு!!!
March 23, 2016
ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! 1 சின்னஞ் சிறுகுருவி போலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2 கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா! 3 பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது மனிதர்க்கு தோழனடி பாப்பா! 4 வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் ... Read More »
ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்!!!
March 23, 2016
மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று.. தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் ... Read More »
பீர்பாலும் அக்பரும்!!!
March 23, 2016
டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான ... Read More »
கண்ணன் – என் குழந்தை!!!
March 23, 2016
(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் – பைரவி) (தாளம் – ரூபகம்) ஸ ஸ ஸ – ஸா ஸா-பபப தநீத – பதப – பா பபப – பதப – பமா – கரிஸா ரிகம – ரிகரி – ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக. 1. சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே – ... Read More »
தெனாலி ராமன் கதைகள் – காளியிடம் வரம் பெற்ற கதை!!!
March 23, 2016
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் ... Read More »