ஒரு குருவும், சீடனும் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஓரிடத்தில், பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தனர். சீடன், குருவிடம் கேட்டான். “”குருவே! ஆண்டவன் தானே உலகத்தைப் படைத்தார். எல்லோரையுமே நல்லவர்களாகவே படைத்திருந்தால்…. உலகத்தில் பிரச்னையே இருந்திருக்காதே….?” குரு அதைக் கேட்டு சிரித்தார். “”அப்பனே! நீ எத்தனை நாள் உயிர் வாழ்வாய்?” என்றார். “”தெரியவில்லை! அநேகமாய் எழுபது ஆண்டு வரை இருக்க ஆசை…” “”ஏனப்பா! சாகாவரம் பெற ஆசையில்லையா? “”எப்படி முடியும் குருவே! பிறந்தவன் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும்…” குரு ... Read More »
Monthly Archives: March 2016
கர்வமுள்ள மனது!
March 28, 2016
ஒருஇளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன்ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தைசொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும்படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான். ஆனால், கடவுள் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். “இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு தரிசனம் கிடைக்கவில்லையே’ என்று நினைத்தான். சிலகாலம் அமைதியாக இருந்தான். ஒருசமயம், ஒரு மகானிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான். தான், படித்த மேதாவியாக இருந்தும் கடவுள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்றும் ஆணவமாகப் பேசினான். அவனது கர்வத்தைக் கவனித்த மகான்,””தம்பி! ... Read More »
ஆசையா போகவே போகாது!
March 28, 2016
வளமாக வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், காலப்போக்கில் பல பிரச்னைகளில் சிக்கி பணத்தை இழந்தார். அமைதி வேண்டி ஒரு துறவியிடம் முறையிட்டார். “”சுவாமி! பணக்காரனாக இருந்து ஏழையாகி விட்டேன். எல்லா துன்பத்திற்கும் காரணம் ஆசையே என்று உணர்ந்து விட்டேன். இவ்வளவு அடிபட்ட பிறகும்,ஆசையைக் குறைக்கும் வழி தெரியவில்லை. அதிலிருந்து அடியோடு விடுபடுவது எப்படி?” என்று கேட்டார். புன்னகைத்த துறவி,””அப்பனே! எத்தனை வேளை சாப்பிடுகிறாய்?” என்று கேட்டார். “”பணக்காரனாக இருந்தபோது, நினைத்த போதெல்லாம் சாப்பிட்டேன். இப்போது மூன்று வேளை சாப்பிடுகிறேன்….” என்றார். “”சரி! ஒருவேளை உணவை மறந்து விடு,” என பதிலளித்தார். துறவியின் பேச்சைக் கேட்டு ... Read More »
முயற்சியை தீவிரமாக்குங்கள்!!!
March 28, 2016
* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதும் செல்லரித்துப் போகும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும். * உணவு உடனே ஜீரணமாக வேண்டும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்றநல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை. * சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலை முடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரை மனதுடன் இறங்கக்கூடாது. இது ஆபத்தானது. * கிணற்றுக்கோ, ஏரிக்கோ அல்லது பரந்த சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும், நம் கையில் ... Read More »
இக்கரைக்கு அக்கரை பச்சை!
March 28, 2016
சவுபரி என்ற முனிவருக்கு உலகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மெய்யானஇறைவனைக் காண வேண்டும் என, கடலுக்கடியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டார். பத்தாயிரம் வருடத்திற்கு ஒருமுறை வெளியே வந்து, பழங்கள்,கிழங்குகளை சாப்பிட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் போய்விடுவார். ஒருமுறை,அவர் கண் விழித்த போது, பெரியதும், சிறியதுமாக 200 மீன்கள் கொண்ட கூட்டம் அவர்இருந்த இடத்தைக் கடந்தது. உடனே சவுபரிக்கு, “”ஆகா! இந்த மீன்கள் குடும்பமாக செல்லும் அழகே அழகு. நாமும் இல்லறத்தில் இருந்திருந்தால், மனைவி, குழந்தை, பேரன், பேத்திகள் என சந்தோஷமாக இருந்திருக்கலாமே!” என எண்ணினார். கடலை விட்டு வெளியே வந்து,மாந்தாதா என்ற மன்னனிடம் போய் பெண் கேட்டார். அந்த மன்னனுக்கு 50 பெண்கள். வயதான அவருக்கு ... Read More »
நம்பிக்கை தத்துவங்கள்
March 28, 2016
வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது! ———————————————————————————– செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை . அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது. ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் . பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது. ———————————————————————————– வாழ்வு காலத்தில் நன்மையை செய்… தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்! ———————————————————————————– நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும். ———————————————————————————– நல்ல நண்பனை ... Read More »
வெற்றியின் படிமுறைகள்
March 28, 2016
நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும். இது ஏன்? என்ன காரணத்தினால் ?. அதீக நம்பிக்கை சோம்பல்த்தனம் அலட்ச்சியப்போக்கு சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம். மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்) பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம் மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில்பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறுஅட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள் இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு ... Read More »
முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்
March 28, 2016
முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில முக்கியமான தத்துவ சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்- புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான் கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்-கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம். நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான ... Read More »
“இந்நிலையும் மாறிவிடும்.”
March 28, 2016
தியான வகுப்பு ஒன்றில் புதிதாய் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னுடைய தியானம் மிகக் கடுமையாயிருக்கிறது. இதனால் என் மனநிலையே மாறிப்போகிறது. கால்கள் மிகவும் வலியெடுக்கின்றன. மேலும் தொடர்ந்து நான் தூக்கத்தையே உணர்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை. பயங்கரமாக இருக்கிறது, முன்னெப்போதும் இப்படி உணர்ந்ததில்லை,” என்றான். குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” ஒரு வாரம் கழித்து, அதே மாணவன் மீண்டும் ஆசிரியரிடம் சென்று சொன்னான், “என்னுடைய தியானம் மிகவும் அருமையாயிருக்கிறது. இதனால் நான் அமைதியாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னையே நான் உணர்கிறேன்,” என்றான் குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” Read More »
வில்லியன் ஹென்றி பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்
March 28, 2016
பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயேகம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், பள்ளியில் கம்ப்யூட்டர்களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு. இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு புரோக்ராம் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அந்த காண்ட்ராக்ட்டை கேட்ஸின் நண்பர்கள் குழு ... Read More »