ஒரு அரசன், “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என ஒரு துறவியிடம் கேட்டான். “”நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே” என்று அவர் பதில் கூறினார். அரசனுக்கு புரியவில்லை. “”வா! என் கருத்தை விளக்குகிறேன்,” என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, “”எனக்கேது குடும்ப வாழ்வு,” என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார். ... Read More »
Monthly Archives: March 2016
ஏன் இத்தனை கடவுள்!
March 28, 2016
கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், “”ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்” என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார். “”ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?” பேச்சாளர் கேட்டார். “”உன் வயதென்னப்பா?” “”ஏழு” “”உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா….?” “”என் அம்மா; அக்கா; அது என் அப்பா…” பேச்சாளர் ... Read More »
வீரமான நடைபோடு!
March 28, 2016
மாவீரன் நெப்போலியனிடம் ஓடிவந்தான் அந்த வீரன். “”அரசே! தங்களுக்கு மகிழ்ச்சிதரத்தக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா?” என்றான். நெப்போலியன் சிரித்தான். “”வீரனே! நான் துன்பப்படும்படியாக ஏதேனும் செய்தி இருந்தால் முதலில் அதைச் சொல், மகிழ்ச்சி தரும் செய்தியை அடுத்ததாக கேட்கிறேன்,” என்றான். அப்போது, ஒரு வீரன் பணிவுடன்,””தாங்கள் இப்படி சொல்வதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். “”வீரர்களே! வாழ்க்கை என்ற போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். இன்பத்தை தரும் செய்திகள் தற்காலிக சுகத்தைத் தான் கொடுக்கும். துன்பப்படும்படியான செய்திகள் தான் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். வீரமாக நடை ... Read More »
ஜென் கதை : புத்தரின் மடாலயத்தில் நிகழ்ந்த சம்பவம்
March 28, 2016
அமைதியாக அமர்ந்திருந்த துறவியிடம் அரசன் கேட்டான். ”இறந்தபின் நமது புனிதமான ஆத்மாஎன்ன ஆகும்?” ”அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ” ”நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே” ”உண்மைதான்.. ஆனால் நான் இன்னும்சாகவில்லையே” என்றார் துறவி புன்னகையோடு. அருமையான ஜென் கதை ஒன்று… புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படைசந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தைமக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும்சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. ... Read More »
அன்பால் வெற்றி கொள்!
March 28, 2016
* எதை எதிர்பார்க்கிறாயோ, அதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு. * சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால், சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும். * சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம். * தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும். * ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ... Read More »
முட்டாள் யார்?
March 28, 2016
அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்றுமுல்லா மறு மொழி அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால்தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது. தம்மை வரச் சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது ... Read More »
மனம் புண்படலாமா?
March 28, 2016
பொதுவாக, கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறதுசமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள், “”இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!”என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து,சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார். ... Read More »
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
March 28, 2016
1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the ... Read More »
வெற்றியின் ரகசியம்
March 28, 2016
ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்துஅமுக்கினார்.அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியேஅமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் ... Read More »
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
March 28, 2016
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்,அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள்இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்தஅலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு,திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாகவரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால்ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது எனஇப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. இவ்வளவு தானா… இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்றபெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”,அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்ததானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்துவிடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்குபெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள்பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும்எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்”ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால்நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல்காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதைவிட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்துவருகின்றன!! பிரமிப்பு !!! இதை எல்லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது. Read More »