ஆசைகளைப் பற்றி நமது வேதங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ! ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று – அடிப்படையான ஆசைகள், ஆதாவது,குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது – அவ்வப்போது வரும் ஆசைகள். அதாவது, என்பது என்ன ? இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம் ! டி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம் ! இதெல்லாம்தான் டாபிக்கல் ஆசைகள் ! அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை ! இதில்மூன்று ஆசைகள் அடக்கம். இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்றுதெரிந்தால், இன்னும் ஒரே ... Read More »
Monthly Archives: March 2016
புதுமைக்குத் தேவை சவால்!!!
March 29, 2016
நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை, எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர் ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப் போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்! டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய ... Read More »
நிம்மதியே நிஜமான செல்வம்!
March 29, 2016
துறவி ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். பணக்காரன் ஒருவன் அவரிடம் ஆசி வாங்கினால் தனக்கு மேலும் பணம் பெருகும் என்ற எண்ணத்தில் அவரை சந்திக்கசென்றான். துறவியின் பாதத்தில் விழுந்து வணங்கினான். “”அன்பனே! எழுந்திரு! உனக்கு என்னப்பா குறை!” என்று கேட்டார். “”ஐயா! உங்கள் நல்லாசியுடன் நான் இன்னும் பணம் சேர்க்க வேண்டும் என்றுவாழ்த்துங்கள்,” என்று கூறினான். துறவி அவனிடம், “”செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. பொருளாசைக்கு எல்லையே கிடையாது. மனம் என்னும் குரங்கு தாவிக் கொண்டே தான் திரியும். நாம் தான் மனதை ஒருமுகப்படுத்தி நிலைநிறுத்தவேண்டும். இல்லாதவர்களுக்கு ... Read More »
நான் விரும்பும் மனிதன்!!!
March 29, 2016
மாற்றங்கள் அவன் சிக்னலிற்காகக் காரில் காத்திருந்தான். அவனுக்கு முன்னாலிருந்த காரில் ஒரு பெண் ஏதோ பேப்பரைப் படித்துக்கொண்டிருந்தாள் சிக்னல் பச்சைக்கு மாறியது. ஆனாலும் அந்தப் பெண் காரைக் கிளப்புவதாகக் காணோம். அவள் சிக்னல் மாறியதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. மறுபடியும் பச்சை சிவப்பாகியது. பின்னால் காத்திருந்தவனோ கோபத்தால் சிவந்திருந்தான். பல கெட்ட வார்த்தைகளைச் சொல்லி உறுமி, ஸ்டியரிங் வீலைக் கைகளால் குத்தி, தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த போலிஸ்காரர் அவனை எச்சரித்தார். அதற்கு அவன், நான் “என் காருக்குள் இருந்து கத்துகிறேன். அதற்கு நீங்கள் தடைபோட எந்த சட்டமும் இல்லை’ என்று கோபமாகக் ... Read More »
பிரார்த்தனையும் மனிதனும்!
March 29, 2016
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து ” அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான். ” தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் அவன். ” நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி ... Read More »
எண்ணங்களை பூட்ட வேண்டாம்!!!
March 29, 2016
முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணிஅடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது. இந்நேரம் போய் கேட்பது சரியல்ல மறுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!. மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார். பக்கத்து வீட்டில் நிறைய ... Read More »
அட ஆமாயில்ல!
March 29, 2016
முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள். – ஆண்டிஸ்தினீஸ் சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும். – ஹெர்பர்ட் போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும். – நெப்போலியன் அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் – இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள். – செஸ்டர்ஃபீல்டு இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு ... Read More »
மன்னனின் மதிப்பு
March 29, 2016
ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில்உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே! ” என்று கேட்டார். ” அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப் பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் ” என்று முல்லா அடக்கமாகப் பதில் சொன்னார் ” சரி, இப்போது நீர் என்னை உமது ... Read More »
உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தடை கல்?
March 29, 2016
உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில் அதை நீங்கள் ஒழிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கான மிக பெரிய தடை கல்லாகும். தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து விடும்.எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ண தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும். வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள்,செலவு செய்யும் மனப்பான்மை,உணவு பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதை பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது.அதுவே அவர்களிடத்து தாழ்வு மனப்பான்மை உண்டாக காரணம் ஆகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குபுறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். கால போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து போய் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடுபடுகின்றனர். தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள்உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும். சிலருக்கு படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். அதன் விளைவாக சரியாக பாடங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண் எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள். பள்ளியில் நன்றாக படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் ஆவார்கள். பள்ளி படிப்பு என்பது ஒருவருடைய வாழ்க்கையை ஓரளவு தான் நிர்ணயம் செய்யும். ஒருவருடைய வளமான வாழ்க்கையை தீர்மானம் செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் ... Read More »
எதிரிகள் ஜாக்கிரதை!
March 29, 2016
ஒரு ராஜாவுக்கு எதிரி ஒருவன் இருந்தான். அவனை ஆரம்பத்திலேயே அழித்துவிடுங்கள் என்று மந்திரி யோசனை சொன்னார். ராஜா கேட்கவில்லை. “”இவனெல்லாம் ஒரு ஆளா! என் தகுதிக்கு முன்னால் இவன் தூசு,” என்றார். இருப்பினும், மந்திரி வற்புறுத்தியதால், அவன் மீது போர் தொடுத்துச் சென்றார். அந்த எதிரி அவனைக் கண்ட மாத்திரத்தில் காலில் விழுந்து விட்டான். இப்படி பயப்படுபவனா என்னோடு மோதுவான் என்ற தைரியத்தில் ராஜா திரும்பி விட்டார். மந்திரியோ விடவில்லை. அவனைக் கொன்றே தீர வேண்டும் என்றார். ராஜா திரும்பவும் போருக்குப் போனார். அப்போது அவன் காலில் விழவில்லை. ... Read More »