Home » உடல் நலக் குறிப்புகள் » வெள்ளைப் பூண்டு மருத்துவம் :-
வெள்ளைப் பூண்டு மருத்துவம் :-

வெள்ளைப் பூண்டு மருத்துவம் :-

சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது. இந்த வாரம் பூண்டிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா?

* பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.

* வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன.

* தயோ சல்பினேட்’எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ‘ஆலிசின்’எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.

* கெட்ட கொழுப்பான ‘கொலஸ்டிரால்’உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ‘ஆலிசின்’மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

* ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ‘ஆலிசின்’உதவுவதாக தெரிய வந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக் கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் ‘கரோனரி’தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

* இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

*பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த் தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்பொருளாகும்.

* பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. செலீனியம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். நோய் எதிர் நொதிகள் செயல்பட சிறந்த துணைக் காரணியாகவும் இது செயல்படும். மாங்கனீசு, நொதிகளின் துணைக் காரணியாகவும், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது பங்குபெறுகிறது.

* பீட்டா கரோட்டின், ஸி-சான்தின் போன்ற நோய் எதிர்ப் பொருட்களும், ‘வைட்டமின்-சி’போன்ற வைட்டமின்களும் உள்ளன. ‘வைட்டமின்-சி, நோய்த் தொற்றை தடுக்கும், தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீரேடிக்கல்களை விரட்டியடிக்கும் தன்மையும் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top