* நம்மை வழிநடத்தும் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிவது ஒன்றே கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம்.
* எறும்பு சுயநலமில்லாமல் தன் இனத்தோடு கூடி வாழ்கிறது. நாமும் ஒற்றுமைஉணர்வுடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை அடைவோம்.
* ஒரு பெரிய மரத்தையே கரையான் அரித்து விடுவது போல, தீயகுணத்தால் மனம் அடியோடு அழிந்து போகும்.
* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. உண்ணும் உணவு ஜீரணமாகி உடலோடு கலப்பது போல, மனதால் நல்லதை உள்வாங்கி செயலிலும் காட்ட வேண்டும்.
* வாழ்க்கை நாணயம் போன்றது. இன்பம், துன்பம் இரண்டு பக்கங்களையும் அதில் யாராலும் தவிர்க்க முடியாது.
* மனிதன் சுயகட்டுப்பாட்டை இழந்து விட்டால், பண்பாடு சிதைந்து மிருகமாக மாறி விடுவான்.
* பெற்றோரை மதித்து நன்றி காட்டுங்கள். அவ்வாறு நன்றி காட்ட மறந்தால், வாழ்வு அர்த்தமற்றதாகி விடும்.
*கோபத்தாலோ, பொறாமையாலோ, ஏக்கத்தாலோ மனம் பதட்டப்படும்போது குளிர்ந்த நீரைக்குடியுங்கள். அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் நீண்ட தூரம் நடைபோட்டு வாருங்கள். மனதை அரிக்கும் சிந்தனைகள் வெளியேறி தூய்மையாக்கப் பட்டுவிடும்.* மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்வது எளியதாகும். ஆனால், நன்மை தரக்கூடியவற்றைச் செய்வது கடினம். மகிழ்ச்சி தருபவை எல்லாம் லாபகரமானது அல்ல.
* வாழ்க்கை ஒரு போர்க்களம். தர்மபூமி. அங்கு கடமைகளும், ஆசைகளும் எப்போதும் போராடுகின்றன. மனதில் எழுகின்ற ஆசை என்னும் பயங்கர தீ, பொறாமை என்னும் விரோதி ஆகியவற்றுக்கு பணிந்து செல்வது கோழைத்தனமாகும்.
* எளியவர்களுக்காக செய்யும் தொண்டு கடவுளுக்குச் செய்யும் தொண்டை விட மேலானதாகும். கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எளியவர்களுக்குச் சேவை செய்வதைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார்.
* தகுதியான நபருக்குச் சரியான நேரத்தில் செய்வது தான் சேவை. சமூகப்பணி என்பது வெறும் விளம்பரப்பணியாக அமைந்து விடக்கூடாது. நம்மால் முடிந்த நல்ல செயலை பிறருக்குச் செய்ய வேண்டியது கடமையாகும்.
– சாய்பாபா