Home » பொது » குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

  • கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
  • அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
  • குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
  • அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல்,நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
  • உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
  • பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கலாம்.
  • தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும்குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது.
  • கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல(அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை /தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று மனம் இழக்க மாட்டார்கள் :))
  • டிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில்,பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
  • கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்டவயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய்தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களைநல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.
  • குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
  • உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
  • கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top