ஒருநாள் கர்ணன் எண்ணைக்குளியல் எடுத்துக்கொண்டிருந்தான்:
. அந்த நேரத்தில் வந்த ஒரு வறியவரை, வாயிற்காப்போனும் தடுக்காமல் உள்ளே அனுப்பிவைக்க ….அவ்வறியவரும், தங்கக் கிண்ணத்தில் எண்ணையோடு வேலையாட்கள் எண்ணை தேய்த்து விட்டுக்கொண்டிருக்க …. எந்த ஒரு ஆபரணமும் பூணாத நிலையில், இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்தவாறிருந்த கர்ணனை கண்டு இரு கரங்களையும் கூப்பினார் : .
. கர்ணனும் புன்முறுவலுடன் ,
” வாருங்கள் ….வாருங்கள் …..என்ன வேண்டும் தங்களுக்கு ?”
என்றான் உடம்பில் அணிகலன்கள் ஏதுமின்றி தான் இருப்பதை மறந்து,:
வறியவரும், தனது வறுமையைக் கூறி, உதவுமாறு வேண்டினார்.
கொடுத்து தேய்ந்து சிவந்த கர்ண மாமன்னனின் திருக்கரங்கள் அனிச்சையாய் ஒரு கணம் தனது உடம்பைத் தடவ….. , எங்கே தனது சொல்லை, உடனே நிறைவேற்ற இயலாமல் போய் விடுமோ என்று கலக்கத்துடன் …சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட….சட்டென்று அவன் கண்களில் , தனது இடதுகைப்பக்கம் எண்ணை தேய்த்துக்கொண்டிருந்த வேலையாளின் கையில், தங்கக் கிண்ணம் வைத்திருக்கும் காட்சி தென்பட ..
..தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் நோக்குடன் , .கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இடது கையால் அக்கிண்ணத்தை அந்த வேலையாளிடமிருந்து வாங்கி, இடது கையாலேயே அதை அவ்வறியவருக்கு அளித்தான் !
மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்ட வறியவர் பின் லேசான தயக்கத்துடன் ,
” மாமன்னா…..எனக்கு ஒரு சந்தேகம் ! இடது கையால் தான, தர்மங்கள் செய்யலாமா? ”
என்று வினவினார்.
மறுகணம் அந்த அரண்மனையே அதிரும்படியாக சிரித்த கர்ண மகாராஜன் பின் தேங்காய் உடைப்பது போல பட்டென்று போட்டு உடைத்தான் !,
” ஐயா …சற்று முன்பு நான் இடது கையால் தானம் செய்ததை பற்றி தானே வினவுகிறீர்கள்!
. . என் இடது கையிலிருந்த தங்கக் கிண்ணத்தை எனது வலது கைக்கு மாற்றுவதற்குள், எனது மனம், தங்களுக்கு இந்த தங்கக் கிண்ணம் தேவைதானா….அல்லது இதைவிட குறைந்த மதிப்பில் ஏதாவது கொடுக்கலாமோ – என்று மாறிவிடும் முன்பே தானத்தைச் செய்து விடலாம் என்கிற எண்ணத்திலேயேசற்று முன்பு எனது இடது கை தானம் நடந்தேறியது ! ”
என்று கூற …..
கேட்டுக்கொண்டிருந்த அந்த வறியவரின் ..கண்களில் பிரவாகமாய் கண்ணீர் பெருக்கெடுத்தோட.
..நன்றியும் , கருணையுமாய் அவனை நோக்கியவரின் கண்களில், இப்போது கர்ணன் மங்கலாக தெரிந்தான் !! .