உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில்
அதை நீங்கள் ஒழிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கான மிக பெரிய தடை கல்லாகும்.
தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து விடும்.எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ண தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள்.
பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி
இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும். வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள்,செலவு செய்யும் மனப்பான்மை,உணவு பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதை பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது.அதுவே அவர்களிடத்து தாழ்வு மனப்பான்மை உண்டாக காரணம் ஆகிறது.
இந்த தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை
மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குபுறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கால போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து
போய் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன்
ஈடுபடுகின்றனர்.
தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள்உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும்.
சிலருக்கு படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை
உண்டாகிவிடும். அதன் விளைவாக சரியாக பாடங்களில்
கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண்
எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக
மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு
வந்து விடுவார்கள்.
பள்ளியில் நன்றாக படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள்.
இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர்
காமராஜர் ஆவார்கள்.
பள்ளி படிப்பு என்பது ஒருவருடைய வாழ்க்கையை ஓரளவு தான்
நிர்ணயம் செய்யும். ஒருவருடைய வளமான வாழ்க்கையை தீர்மானம்
செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.
பிறக்கும் குழந்தைக்கு தாழ்ந்தவரா உயர்ந்தவரா என்று தெரியாது.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள மனிதர்களால்ஏற்படுத்தப்பட்டவை. படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல.அனைவருமே சமம்.
இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாக பல காரணங்கள்
கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து விரட்டவேண்டும் என்றால் முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில் விதிக்க வேண்டும்.
நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை
மனதில் ஊட்டி தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறியுங்கள்.
நம்பிக்கை எனும் விதையை ஊட்டுவதற்கு தியானம் பெரிதும் உதவுகிறது.தியானம் எனும் அறிய கலையின் மூலமாக தாழ்வு மனப்பன்மையினைதகர்த்து எறியலாம்.
தியானம் செய்வதின் மூலமாக சிந்தனை திறன் சரியாக வேலை செய்துநாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உண்மையினை உணர செய்து ஒருவரதுமனதில் இருந்து தாழ்வு மனப்பன்மையினை தூக்கி எறிய செய்கிறது.