Home » படித்ததில் பிடித்தது » இன்னும் ஒரே ஒரு நாள்…
இன்னும் ஒரே ஒரு நாள்…

இன்னும் ஒரே ஒரு நாள்…

ஆசைகளைப் பற்றி நமது வேதங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ! ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று – அடிப்படையான ஆசைகள், ஆதாவது,குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது – அவ்வப்போது வரும் ஆசைகள். அதாவது, என்பது என்ன ?

இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம் ! டி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம் ! இதெல்லாம்தான் டாபிக்கல் ஆசைகள் !

அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை ! இதில்மூன்று ஆசைகள் அடக்கம். இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்றுதெரிந்தால், இன்னும் ஒரே ஒரு நாளாவது கூடுதலாக நாம் உயிர்வாழ மாட்டோமா ?என்று ஓர் ஆசை எல்லோருக்குமே பிறக்கும். இதுதான் முதல் ஆசை !
இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக்.. . நான் முதன் முதலாகக் கீதையைப் பற்றிச் சொற்பொழிவாற்றப் போனபோது, இந்தக் கூட்டத்தில் முதல் நாள் பேச்சைமுடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டேன். அன்றிரவு நான் தங்கியிருந்த ஓட்டல் அறையின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த போது, ஓர் இளம்பெண் எதிரில் நின்றிருந்தாள் !
நான் என்ன ? என்று கேட்பதற்கு முன்பே, அந்தப் பெண் படபடவென்று பேசஆரம்பித்தாள்.
நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இன்று என் கொடுக்மைக்கார மாமியாரின் வீட்டைவிட்டுக் கிளம்பினேன் !  கடற்கரையில் ஜனசந்தடியாக இருந்தது. சரி இன்னும் ஒன்று இரண்டு மணி நேரம் கழித்துத் தற்கொலை செய்து கொண்டால் என்ன.  என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இனி ஒரே ஒருநாள் கூட வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை ! என் உயிரைமாய்த்துக் கொள்ள, இப்போது நேராக கடகற்கரைக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறேன்.. . என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே நடக்கஆரம்பித்தாள்.
சந்நியாசியான என்னை ஓர் இளம்பெண் நள்ளிரவில் சந்தித்துவிட்டு, நேரடியாகக் கடற்கரைக்குப் போய்த் தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆகும்.. .? வேகமாகக் கிளம்பி அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, நான் சொல்ல வந்ததில் பாதியைத்தான் இன்று சொற்பொழிவில் சொன்னேன்.. . சொல்ல வேண்டியது இன்னும் மீதி இருக்கிறது ! நாளை வரை காத்திருந்து நான் சொல்லப் போவதையும் கேட்டுவிடு.. . என்றேன்.
அடுத்த நாள் கீதை சொற்பொழிவை, நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். அங்கே நான் சொன்ன விஷயம் இதுதான் –
எல்லோருக்குமே ஒரே நாள் கூடுதலாக வாழ்ந்துவிட வேண்டும் என்று ஆசைஇருக்கிறது. இதை நமது வேதம் சத் என்று குறிப்பிடுகிறது. ஆனால், கூடுதலாகவாழப்போகிற அந்த நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்றே அனைவரும்ஆசைப்படுகிறோம் ! இதை வேதம் ஆனந்தம் என்கிறது.
நிரந்தர தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் என்னைச் சந்தித்த பெண் உட்பட ! (அதன் பிறகு நான் அந்தப் பெண்மணியைப் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.)
மனிதனுக்கு உள்ள மூன்றாவது நிரந்தர ஆசை, தனது வாழ்நாளில் நிறையதகவல்களை – அறிவைச் சேகரிக்க வேண்டும் என்பது ! இந்தக் கருத்தை எங்கேசொன்னாலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்புவது வழக்கம் ! என் மகனுக்குப் பத்து வயதுதான் ஆகிறது. அவனுக்குப் பள்ளிக்கூடப் பாடங்களிலேயே ஈடுபாடு இல்லை ! ஆனால் நீங்களோ, ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ! என்கிறீர்கள். அது எப்படி ? என்று சிலர் கேட்கலாம்.ஒருவனுக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு அர்த்தம், எந்த வகையான அறிவைச் சேகரிப்பதிலுமே அவனுக்கு ஆசை இல்லை என்பது கிடையாது.
ஒரு முக்கியமான ரகசியம் ! இது உனக்குத் தெரியக்கூடாது ! என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிப் பாருங்கள் ! அது என்ன ரகசியம் என்று அறிய, அடுத்த நாள் வரை அவரால் காத்திருக்க முடியாது. புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான், மூன்றாவது நிரந்தரமான ஆசை ! இந்த ஆசையைத்தான் நமது வேதங்கள் சித் என்று குறிப்பிடுகின்றன !
ஆக – சத் எனப்படும் வாழ்கிற ஆசை.
அடுத்து ஆனந்தம் என்ற ஆசை.. . வாழ்கின்ற நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பது.
மூன்றாவதான சித் எனப்படும் அறிவைச் சேகரிக்கும் ஆசை.
இதைத்தான் நமது வேதம் சத்-சித்- ஆனந்தம் என்று மொத்தமாகச் சொல்கிறது ! பேச்சுத் தமிழில் சொன்னால், சச்சிதானந்தம் !
சத், சித் ஆனந்தம் என்ற மூன்று ஆசைகளையும்தான் வாழ்க்கைப் பெருங்கடலில் மூச்சை இழுத்தப் பிடித்துக்கொண்டு முத்தெடுப்பவன் போல தேடிக்கொண்டேயிருக்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top