அட ஆமாயில்ல!

அட ஆமாயில்ல!

முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள்.

–         ஆண்டிஸ்தினீஸ்
சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
–         ஹெர்பர்ட்
போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும்.
–         நெப்போலியன்
அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் – இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்.
–         செஸ்டர்ஃபீல்டு
இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு புரிந்து கொள்வதில்லை.
–         பாஸிட்
இயற்கையின் விதிகள் நீதியானவை. ஆனால் பயங்கரமானவை.
                           – லாங்ஃபெல்லோ
இழிவான அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாக இருப்பதைக் காட்டும்,மேலும் பலவீனப்படுத்தும்.
–         கௌப்பர்
வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம்.
–         ஹம்போல்ட்
உலகின் இயல்பு இறந்து போன திருத்தொண்டர்களைப் புகழ்தலும் உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துவதும் தான்.
–         என்.ஹேர்
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள். அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
–         பிளேடோ
உலகில் நமக்குள்ள ஒரே வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
                           – லாக்
களைப்பு கல்லின் மீதும் குறட்டை விடும். அமைதி இல்லாத சோம்பலிற்குத் தலையணையும் உறுத்தும்.
                            – ஷேக்ஸ்பியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top