18.1.1946-ல் ஆபீசில் ஒரு நிகழ்ச்சி. நிதிக் காப்பாளர் லீவு எடுத்துக்கொண்டு போய் விட்டார்….
”அறிவினால் சிருட்டி செய்த
அதிகாரப் பிரயோகத்தின்
நெறியினை உண்ரா மாந்த்ர்
நிர்வாகம் செய்யும் போது
முறிவிலா முறைப் பழக்கி
முன் விதி நினைந்து மக்கள்
கறியிலா உண்வைக் கொள்ளும்
கருத்தொக்க வாழ்கின்றாரே!”
என்று எழுதிக் கொடுத்தேன். அதிகாரச் சட்டங்கள் அறிவாளிகளால் வகுக்க்ப் பெறுகின்றன. அவற்றை முட்டாள்கள் அமுல் நடத்தும்போது அந்த ஆளுகைக்கு உட்பட்டவர்கள், வருந்தத்தான் நேரும். உறவை முறித்துக்கொண்டு போனால் வாழ்வது எப்படி? இந்த நிலையில் கறியில்லாத போதிலும், பசிக்கொடுமை தீர வெறும் சோறு சாப்பிடுவதைப் போல அறிவில்லாதவர்கள் கீழ், உத்தியோகம் பார்க்கின்ற்வர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிவின் கீழ்மை நிலையிலுள்ளவர்களில் சிலர் சந்தர்ப்ப வசமாக அதிகாரத்திற்கு வந்து விடுகிறார்கள். அந்த அதிகாரமே தங்கள் சொந்த சொத்து போல கருதிக்கொண்டு அவர்கள் கீழ் வேலை பார்க்கும் துணைவர்களுக்கு அளிக்கும் துன்பங்களோ சொல்லி முடியாது. இத்தகைய சித்திரவதையோடு மட்டும் விட்டு விடுகிறார்களா? தம் கீழ் பணியாற்றும் அவர்கள் இரகசிய ரிக்கார்டையும் களங்கப்படுத்தி விடுகிறார்கள். அவர்கள் உத்தியோக உயர்வையும் வருடாந்திரச் சம்பள உயர்வையும் பாதிக்கும் அளவிற்கு அவர்கள் தீமை பரவி விடுகிறது. அவர்கள் செய்யும் பாவம் அவர்களையே பழிவாங்கும் பிற்காலத்தில், அதன் பின்னர்தான் அவர்கள் திருந்துவார்கள்…..
– மகரிஷி –
எனவே அன்பர்களே! இது போன்ற சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடக்கும் போது சற்றும் மனம் தளராமல், முட்டாள்களின் மிரட்டல்களுக்குப் பயப்படாம்ல்
“ரெளத்திரம் பழகு”
என்ற முறையிலே அறப்போராட்டம் நடத்துவோம்.