Home » உடல் நலக் குறிப்புகள் » பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்
பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்

விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம். உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை முடியும் நரைக்கும்.

இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.

தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top