Home » படித்ததில் பிடித்தது » நல்லதை மட்டுமே காண்போம்

நல்லதை மட்டுமே காண்போம்

* வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணுவது அறியாமை. இதனால் தான் பொன்னையும், பொருளையும் தேடி அலைந்து வாழ்நாளை வீணாக்குகிறோம்.

* மனம் என்னும் வீட்டில், தூய்மையற்ற சிந்தனை நுழைந்தால், இதயத்திரையில் கறை படிந்து விடும்.
* நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டுமே எப்போதும் காண முயலுங்கள்.
* பூமிப்பந்தில் பாதி இருட்டாகவும், பாதி ஒளியாகவும் இருப்பது போல, வாழ்விலும் இன்ப, துன்பம் சரி பாதியாக கலந்திருக்கிறது.
* வாழ்க்கை என்பது ஒரே திசையில் செல்லும் நீரோட்டம். அதனால், ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.
* ஜபம், தியானம், பஜனை போன்றவை விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள். அவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை அடைய முயலுங்கள்.
* நமக்கு எது தேவையோ அதைத் தர கடவுள் தயாராக இருக்கிறார். ஆனால், அதைப் பெறும் தகுதியை வளர்த்துக் கொள்வது அவசியம்.

– சாய்பாபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top