முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மலேசிய மந்திரிகளுக்கு முடி திருத்தும் தொழில் கிடைத்தது.
அவர் பிரதமருக்கு முடி வெட்டும் பொழுது, “இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?” என்று கேட்டார்.
அதற்கு பிரதமர், “நீ முடி வெட்டுகிறாயா அல்லது விசாரித்துக் கொண்டிருக்கிறாயா?” என சத்தமிட்டார்.
முடி திருத்துபவரும், “மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்” என்றார்.
மறு நாள் இரண்டாம் நிலை மந்திரியின் முடியை வெட்டும் பொழுதும், “ஐயா அது என்ன கருப்பு பணப் பிரச்சினை?” என்றார்.
அதற்கு அவர், “என்னிடம் எதற்கு இந்த கேள்வியை கேட்கிறாய்? அது உனக்கு தேவையில்லாதது” என கத்தினார்.
அதற்கு அந்த முடி திருத்துனர், “மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்” என்றார்.
மறுநாள் அந்த முடி திருத்துனரிடம் விசாரணை செய்தனர்.
“நீ எதிர்கட்சியை சேர்ந்தவனா”
“இல்லை ஐயா”,
“நீ அன்வரின் பிரதிநிதியா”
“இல்லை ஐயா”
“பின் எதற்கு முடி வெட்டும் பொழுது மந்திரிகளிடம் சுவிஸ் வங்கி கருப்பு பணம் பற்றி கேள்வி கேட்கிறாய்”
அதற்கு அவர் பதில்….
“ஐயா நான் அவர்களிடம் ஏன் இப்படி கேட்கிறேன் தெரியுமா? சுவிஸ் வங்கி, கருப்பு பணம் பற்றி இவர்களிடம் கேட்கும் பொழுது அவர்களின் தலைமயிர் விறைப்பாக நிற்கிறது. அதனால் எனக்கு வெட்டுவதும் எளிதாக இருக்கிறது”.