Home » பொது » இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.
இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.

இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.

* உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.* இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.

* காணிக்கையுடன் வரும்போது தான், நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கின்றோம், தேவைகளுடன் வரும்போது அல்ல.

* உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளை கொண்டு எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

* பொருள் கிடைத்தும் ஆசை அடங்காவிட்டால் ஆசையும் நிறைவேறாது, செயலும் நிறைவேறாது.

* பிறர் ஆறுதல் சொல்வதால் வருத்தம் தீர்வதில்லை. அவரவர் மனதை சீர்படுத்திக் கொள்வது தான் கவலை தீர்க்கும் மருந்தாக இருக்கும்.

* நாம் உலகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அது நம்மை ஏமாற்றுகிறதே என்று சொல்கிறோம். சரியான முறையில் உலகத்தின் நடப்பை தெரிந்து கொண்டால் வாழ்வில் வெல்லலாம்.

– தாகூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top