அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார்.
அமைச்சர்களைப் பார்த்து,
”யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை மேலாகவும் வாங்குபவர் கை அதற்குக் கீழாகவும் இருக்கிறது. ஆனால், வேறு விதமாக, அதாவது வாங்குவோர் கை மேலாகவும் கொடுப்பவர் கை கீழாகவும் எப்பொழுது இருக்கும் என்பதைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா?” என்று கேள்வியைக் கேட்டார்.
சபையோர் குழப்பத்தோடு பார்த்தனர். ”ஒரு போதும் அப்படி இருக்காது” என்று கூறி விட்டனர்.
அக்பர் பீர்பாலைப் பார்த்து, ”உம்முடைய அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார்.
”மூக்குப் பொடி கொடுப்பவர் கை கீழாகவும், அதைப் பெற்றுக் கொள்பவர் கை மேலாகவும் இருக்கும்” என்று கூறினார் பீர்பால்.
அக்பர் உள்ளிட்ட சபையோர் வியப்படைந்தனர்.