அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து ‘கண்ணால் கண்டது பொய் ஆகுமா?” என்று வினவினார். ‘பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்” என்றார் பீர்பால். ”இதற்கு என்ன ஆதாரம்?” எனக் கேட்டார் அக்பர். சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால். ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால். அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார். அடுத்து, படுக்கை ... Read More »
Daily Archives: March 22, 2016
மதத்தின் தேவை ( பகுதி -2)
March 22, 2016
இவ்வாறு மிக உன்னதமானதொரு கருத்தை எல்லா மதங்களும் வெளியிடுகின்றன. மனித மனம் சிலவேளைகளில் புலன்களின் எல்லைகளை மட்டுமல்லாமல், பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் கடந்து செல்கிறது என்பதுதான் அந்தக் கருத்து, அந்த நேரங்களில், புலன்களின் மூலமாகவோ ஆராய்ச்சி மூலமாகவோ உணர முடியாத பல பேருண்மைகளை மனித மனம் நேருக்குநேர் காண்கிறது. இந்த உண்மைகளே உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. இந்த உண்மைகளை மறுத்துக் கூறவும், இவற்றைப் பகுத்தறிவின் மூலம் சோதிக்கவும் நமக்கு உரிமை உண்டு. மனித மனத்திற்குப் புலன்களையும் ... Read More »
மேலும் கீழும் உள்ள கை!!
March 22, 2016
அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார். அமைச்சர்களைப் பார்த்து, ”யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை மேலாகவும் வாங்குபவர் கை அதற்குக் கீழாகவும் இருக்கிறது. ஆனால், வேறு விதமாக, அதாவது வாங்குவோர் கை மேலாகவும் கொடுப்பவர் கை கீழாகவும் எப்பொழுது இருக்கும் என்பதைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா?” என்று கேள்வியைக் கேட்டார். சபையோர் குழப்பத்தோடு பார்த்தனர். ”ஒரு போதும் அப்படி இருக்காது” என்று கூறி விட்டனர். அக்பர் பீர்பாலைப் பார்த்து, ”உம்முடைய ... Read More »
மதத்தின் தேவை (பகுதி -1)
March 22, 2016
மனித இனத்தின் விதியை உருவாக்குவதற்காக செயலாற்றி வந்துள்ள, இன்னும் செயலாற்றி வருகின்ற சக்திகள் பலவாகும். இவற்றுள் மதம் என்று நாம் சொல்கிறோமோ, அந்த சக்தியை விட வலிமை வாய்ந்தது வேறொன்றுமில்லை. எல்லா சமூக இயக்கங்களும், பின்னால் இங்கே நின்று அவை இயங்க காரணமான இருப்பது மதம் என்ற இந்த தனிப்பட்ட சக்தியே. மனிதர்களை எல்லாம் ஒன்றாக இணைந்து வாழச்செய் உணர்வை தோற்றுவிக்கின்ற சக்திகளுள் மகத்தான சக்தி மதம் என்பதிலிருந்தே தோன்றியுள்ளது. இனம், தட்பவெப்பநிலை, ஏன், பாரம்பரியம் இவற்றின் ... Read More »
ராஜ யோகம் பகுதி – 16
March 22, 2016
11. ஹேது பலாச்ரயாலம்பனை; ஸங்க்ருஹீதத்வா தேஷாமபாவே ததபாவ காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருட்கள் இவை ஒன்று கூடியிருப்பதால் இவையில்லாதபோது அதுவும் இல்லை. காரண காரியங்களால் ஆசை ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆசை தோன்றினால் அது விளைவை உண்டுபண்ணாமல் மறையாது. சித்தத்தில் எல்லா பழைய ஆசைகளும் சம்ஸ்காரங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை செயல்பட்டு ஓயும்வரை அழிவதில்லை. மேலும், புலன்கள் புறப் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதால், புதிய ஆசைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால், ஆசைக்கான காரணம், பலன், ஆதாரம், ... Read More »