“வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கின்றது” (violence begets violence) என்கிற சொற்தொடரை Dr மார்டின் லூதர் கிங் அவர்கள் 1958 இல் தனது உரையில் பயன்படுத்தினார். அறவழிப் போராட்டத்தை தொடர்பவர்களின் முக்கிய கருத்துரு.
“வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. சகோதரத்துவத்தை ஏலாமல் செய்கிறது. சமூகத்தை உரையாடலில் அல்லாமல் தன்னுரையில் விடுகிறது. தப்பிப்பிழைத்தவர்களிடம் கசப்புத்தன்மையையும் அழித்தவர்களிடம் கொடூரத்தையும் உருவாக்கின்றது.”
அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அதனால் ஒரு பைத்தியக்காரனால் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே போன்று அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவெறியை எதிர்த்து மீண்டும் ஒருவர் குரல் கொடுத்தார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர்தான் மார்டின் லூதர் கிங்.