“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை ... Read More »
Monthly Archives: February 2016
மஹாசக்திக்கு விண்ணப்பம்!!அன்னையை வேண்டுதல்!!
February 18, 2016
மஹாசக்திக்கு விண்ணப்பம் மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன யாவையும் செய்பவளே! 1 பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு; சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச் செத்த வுடலாக்கு; இந்தப் பதர்களையே-நெல்லாமென எண்ணி இருப்பேனோ? எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே. 2 உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக் கண்ணீர் பெருகாதோ? வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ? ... Read More »
நல்லதோர் வீணை!!!
February 18, 2016
நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1 விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2 Read More »
காணி நிலம் வேண்டும்!!
February 18, 2016
காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் 1 பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். 2 பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்;-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டுதர வேணும்;-அந்தக் காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன் காவலுற வேணும்;என்தன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும். 3 Read More »
சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/
February 18, 2016
சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து பற்பல வதந்திகள் உலவின. பல மர்மங்கள் இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நூல்களிலும் இணைய தளங்களிலும் பலர் கொடுத்திருந்த தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளேன். தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து தாய்வானின் நடந்ததாக எந்தவித ரெக்கார்டும் இல்லை. பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்ததாகப் பதியப்பட்டிருக்கிறது. CIA ... Read More »
மூளையை பலமாக்கும் மஞ்சள்
February 17, 2016
மஞ்சளுக்கும் பெண்களுக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. அவர்கள்தான் இந்த மஞ்சளை, தங்கள் உடல் அழகுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்; கமகம சமையலிலும் உபயோகிக்கின்றனர். இதே மஞ்சளுக்கு மூளையை பலமாக்கும் `பவர்’ இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள் வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.அதாவது, சமையலுக்காக பயன்படுத்தும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட் பொருள் அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை சம்பந்தப்பட்ட மற்றும் நினைவாற்றலை குறைக்கும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு குறித்து ... Read More »
தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
February 17, 2016
மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் மனிதன் கடுமையாக உழைத்து நன்றாக தூங்குவது இயல்பான வாழக்கை . சிலர் தூங்குவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப்பதாக சொல்லி தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்வர். ... Read More »
ஆயுள் காக்க 10 கட்டளைகள்!!!
February 17, 2016
ஆயுள் காக்கும் 10 கட்டளைகள் :- ஆயுள் காக்கும் 10 கட்டளைகள் ! தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், ‘இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய ‘தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன 1) புகைபிடித்தல் மது அருந்துதல் 2) பல் துலக்காமல் தூங்குதல் 3) வேகமாக உண்ணுதல் 4) காலை உணவைத் ... Read More »
பெண் – அன்பு!!!
February 17, 2016
பெண் பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார் பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு. எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம் பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை – லாண்டர். பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – ... Read More »
பாரதியார் – 25
February 17, 2016
தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்! சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்! எட்டயபுரம், பிறந்த ... Read More »