ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே உதித்த சூரிய ஒளியால் பெரிதாக தெரிந்த அதன் நிழலை பார்த்து தான்தான் இக்காட்டில் பெரியவன் சிங்கத்தை இனி ராஜா என்று அழைக்க கூடாது நான்தான் இனி காட்டிற்கு ராஜா என்று நினைத்துக்கொண்டு ஆணவத்துடன் நடந்து சென்றது.
அப்போது அதற்க்கு எதிரே மானை வேட்டை ஆடி தின்றுவிட்டு, உண்டமயக்கத்தில் வந்துக்கொண்டிருந்த சிங்கம் நரியை ஒன்றும் செய்யாமல் மெதுவாக நரியை கடந்து சென்றது.
இதை கண்ட நரி சிங்கம் தன்னை கண்டு பயந்து மெதுவாக செல்கிறது என்று நினைத்துக் கொண்டது.அது மிகவும் மகிழ்ச்சியுடன் தன் வேட்டையை முடித்து விட்டு மாலை வீடு திரும்பியது.
அனைத்து மிருகங்களையும் அழைத்து எல்லோரிடமும் நடந்தததை சொல்லி “இனி நான்தான் காட்டிற்கு ராஜா” சிங்கமே என்னை கண்டு பயந்து சென்றது என்று கூறியது.
அப்போது மான் ஒன்று இதை நாங்கள் நம்ப மாட்டோம் வேண்டுமென்றால் “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை காட்டிற்கு ராஜாவாக்குகிறோம்”. என்று சொன்னது.
அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடி சென்றது. எதிரே வந்த சிங்கத்தின் முன் மிக கர்வத்துடன் நின்று “என் முன் மண்டியிட்டு செல்” என்று கூறியது.
சிங்கமோ மிக கோபத்துடன் தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, “உன்னை மன்னித்து விடுகிறேன் இங்கிருந்து உடனே சென்றுவிடு” என்றது.
நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டத்து என்று நினைத்து “முடியாது”, என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலை பார்த்தது அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது.
அப்போதுதான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியால்தான் தன் நிழல் பெரியதாக இருந்தது என்று.
கோபத்துடன் இருந்த சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது
நீதி: முட்டாள்தனமாக பெரிதாக யோசித்தால் அதற்க்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.