குழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம்? அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். குழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே ... Read More »
Daily Archives: February 26, 2016
நரியும் அதன் நிழலும்!!!
February 26, 2016
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே உதித்த சூரிய ஒளியால் பெரிதாக தெரிந்த அதன் நிழலை பார்த்து தான்தான் இக்காட்டில் பெரியவன் சிங்கத்தை இனி ராஜா என்று அழைக்க கூடாது நான்தான் இனி காட்டிற்கு ராஜா என்று நினைத்துக்கொண்டு ஆணவத்துடன் நடந்து சென்றது. அப்போது அதற்க்கு எதிரே மானை வேட்டை ஆடி தின்றுவிட்டு, உண்டமயக்கத்தில் வந்துக்கொண்டிருந்த சிங்கம் நரியை ஒன்றும் செய்யாமல் மெதுவாக நரியை கடந்து சென்றது. இதை கண்ட நரி ... Read More »
தயிரும் மருத்துவ பயன்களும்!!!
February 26, 2016
தயிரும் மருத்துவ பயன்களும்:- தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. மிதமான லாக்டோஸ்- சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால், பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு ... Read More »
யோசித்து செயல்படு!!!
February 26, 2016
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர். குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம். யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது. ஒருநாள் ஐந்து ... Read More »
பூரான் கடிச்சா பனை வெல்லம் கொடுங்க!!!
February 26, 2016
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும். ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் ... Read More »