நேரத்தின் மதிப்பு …..
******************
ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்!
ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப்பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்!
ஒரு வாரத்தின் மதிப்பை அறிய வாரப்பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்!
ஒரு நாளின் மதிப்பு என்னவென்று அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலி வாங்குபவரிடம் கேளுங்கள்!
ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று சந்திக்க காத்திருக்கும் காதலரைக் கேளுங்கள்!
ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று ரயிலைத்தவறவிட்ட பிரயாணியிடம் கேளுங்கள்!
ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்!