ஊரை உலுக்கியெடுத்த புயல் ஓய்ந்து ஒரு மணிநேரமே ஆகியிருந்தது. வாட்டியெடுத்த கவலையுடன் மகள் வீட்டிலிருந்து தன் குடிசை நோக்கி விரைந்து வந்த ரங்கசாமி, அந்த தெருமுனையில் நுழைந்தபோதே தான் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அதிர்ந்தார். வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தது புளியமரம். பச்சை மலையை பெயர்த்தெடுத்து வந்து குறுக்கே போட்டாற்போல அது தெருவை அடைத்துக் கிடந்தது. அடிவயிற்றிலிருந்து அடக்க முடியாத துக்கம் கிளம்பி தொண்டையை அடைத்ததில், கண்ணீர் பொங்க அந்த புளியமரத்தை புருவம் சுருக்கி கூர்ந்து பார்த்தபடி ... Read More »
Daily Archives: February 6, 2016
“எது உண்மையான தியானம்?” – வீரத்துறவி!!!
February 6, 2016
ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மன ம் எங்கெல்லாமோ அலை பாய்கிறது. தாங்கள்தான் எனக் கொரு நல்வழி கா ட்டவேண்டும் என் ... Read More »
யாரும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை!!!
February 6, 2016
கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன்அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண் டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்) விவேகானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனை யில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மகா ராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத் தி தேவையான வசதிகளை செய்து தந்தார். மன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய ... Read More »
தண்டியடிகள் நாயனார்!!!
February 6, 2016
தண்டியடிகள் நாயனார் “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் ... Read More »
ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….
February 6, 2016
எப்போதும் விரிந்து மலர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. யாருக்கும் பயனில்லாமல் சுருங்கி விடுவது தான் மரணம். தோல்வியின் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம். அதனால், எத்தனை முறை தோற்றாலும் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். ஒரு நிமிடம் கூட ஓயாமல், ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டே இருங்கள். அது தவறோ சரியோ, எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தவேண்டாம். நமது அகவாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே நாம் காணும் உலகமும் சிறப்பும் தூய்மையும் கொண்டதாக இருக்கும். ... Read More »