Home » சிறுகதைகள் » பிரச்னைகளை சமாளிப்பது எப்படிச்!!!
பிரச்னைகளை சமாளிப்பது எப்படிச்!!!

பிரச்னைகளை சமாளிப்பது எப்படிச்!!!

“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போ கிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.
“என்ன சங்கதி’ என்றார்.
“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை’ என்றான் வந்தவன்.
இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந் தது. அவனுக்கு ஒரு சம்பவ த்தைசொல்லத் துவங்கினார்.
“ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித் துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளைஏற்றிக்கொண்டு சென் றது. ஒர நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனி தன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவ னைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்ச அச்சமா ய்தான் இருந்தது.

கண்டக்டர் அவனிடம் சென் று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொ ல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண் டான். “ஏன் டிக்கெட் வேண் டாம்’ என்று கேட்க கண் டக்டருக்குப் பயம். தள் ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண் டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட் டார். இப்படியே ஒரு வா ரம் கழிந்தது. கண்டக் டருக்கு எரிச் சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். தற் காப்பு கலை வகுப்புகளுக்குப் போ னார். ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரி ன் உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போ னது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டு விட வேண் டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான். கண்டக்டர் தன் தைரியத்தை யெல் லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கி றேன்’.’

இந்தக் கதையைச் சொன்னதும் வந்தவனுக்கு எல்லாவற் றையும் பார்த்து மிரளும் தன்னுடைய குணம் புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி:
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top