Home » சிறுகதைகள் » தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்!!!
தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்!!!

தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்!!!

அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில்அமர்ந்தார்.

அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கி விட் டு அவரவர் இருக்கைகளில் அமர் ந்தனர்.

ஆனால், பீர்பால் மட்டும் வரவில் லை; அவருடைய ஆசனம் காலி யாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப் படாமையால் அக்பருக்கு உற்சா கம் இல்லை. சிறிது நேரம் பொறு த்திருந்தார்: அப்பொழுதும் பீர் பால் வர வில்லை.

ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்குஅனுப்பி அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்அக்பர்.

‘ இதோ வருகிறேன்’ எனச் சொல் லி அனுப்பினார் பீர்பால்.

நேரம் கடந்தது; ஆனால் அவரோ வர வில்லை.

மறுபடியும் சேவகனை அனுப்பி வை த்தார் அரசர்.

முதலில் கூறியபடியே, ‘ இதோ வருகிறேன்’ எனக் கூறினார் பீர்பால்.

ஒரு மணி நேரம் கடந் தது!

சபையில் வீற்றிருந்த வர்கள் பலதிறத்தி னர்; பீர்பாலை விரும் பாத பொறாமைக்காரர்களும்  அங்கே இருந்தனர். அவர்கள் இந் தச் சந்தர்ப்பதைதைப் பயன்படுத்திக் கொண் டனர்.

‘சக்கரவர்த்தி இருமுறை கூப்பிட்டு அனுப்பியும்கூட அவர் வர வில்லையே, அவருக்கு எவ்வளவு கர்வம்’ எனக் கூறி தூபம் போட்டு அக்  பருக்குக் கோபத்தை உண்டாக்கத்  தொட ங்கினர்.

பலரும் சொன்னவுடன் உண்மையிலே யே அக்பருக்குக் கோபம் பொங்கியது.

பீர்பாலைக் கைது செய்து கொண்டு வரும் படி சேவகர்களை அனுப்பினார் அக்பர்.

சேவகர்கள் பீர்பாலிடம் சென்று அரசர் உத்தரவை தெரி வித்தனர்.

பீர்பால் உடனே அரண்மனையை நோ க்கிப் புறப்பட்டு வந்தார். அக்பரை வ ணங்கிவிட்டு தமது ஆசனத்தில் அம ர்ந்தார்.

அக்பருக்குக் கோபம் தணியவில் லை.’ இரண்டு முறை சேவ கர்களை அனுப்பியும்கூட ஏன் உடனே வர வில்லை?’ எனக் கேட்டார்.

‘சக்கரவர்த்தியே, என் குழந்தை அழுது தொந்தரவு கொடுத் துக் கொண்டிருந்தது. அதனால் உடனே வரஇயலவில்லை. இப்பொழுதும்கூட அழுது கொண்டி ருக்கும் குழந்தையை அப் படியே  விட்டுவிட்டுத்தான் இங்கே விரை வாக வந்தேன்’ எனப் பதில் கூறி னார்.

‘ இவ்வளவு நேரம் எங்கேயாவது குழந்தை அழுது கொண்டிருக்கு மா? இப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை யே?’ என்றார் அக்பர்.

‘என் வார்த்தையைச் சிறி து பொறுமையோடு அர சர் கேட்க வேண்டும். அப் பொழுதுதான்  உண்மை விளங்கும். சபைக்கு நான் புறப்படும் சமயம் குழந்தை அழத் தொடங் கியது;

‘என்ன வேண்டும்? ஏன் அழுகிறாய்?’ என்றேன் பதில் கூறாமல் அழுது கொண்டே  இருந்தது; என்ன கேட்டும் பதில் கூறவில்லை. நானும் சமாதானம் கூறிக்கூறி  அலு த்துப் போனேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது.

பிறகு, ‘கரும்பு வேண்டும்’ என்று கேட்டது ‘வாங்கி வரச் சொல்லிக் கொடுத்தேன். மறுபடியும்  அழுகை; ‘கரும்பை நறு க்கித் துண்டுகளாக்கித் தருமாறு’ கே ட்டது. அப்படியே செய்து கொடு த்தேன்.

தின்று கொ ண்டே இருந்த குழந்தை மறுபடியும் அழத் தொட ங்கியது. மறுபடியும் ஏன் அழு கிறாய்? என்று கேட்டேன்; குழந் தையின் கோரிக்கை விநோதமா யி ருந்தது. சுவைத்துத் துப்பிய சக்கை களை எல் லாம் எடுத்து மறுபடியும் முழுக் கரும்பாக ஆக்கித் தருமாறு அடம் பிடித்தது.

நான் என்ன செய்வேன்? அற்புதங்கள் செய்யும் மந்திர சக்தி என்னிடம் இருக்கிறதா? எதுவும் தோன்றாமல் திகைத்துப் போனேன்; குழந்தையின் தொந்தரவு தாங்க இயலவில்லை!

இந்தக் குழந்தைகளே இப்படித் தான். நினைத்த நேரத்தில்எதையாவது கேட்டு அழுது, அழுது துன்புறுத்துகின்றன. நல்ல வேளையாக சேவக ர்கள்வந்தார்கள்; நான் தப்பி த் தேன் என வந்து விட்டேன்’ என்றார்.

சபையில் இருந்தோர், பீர்பால் கூறுவது உண்மைதான் என்ப தைப் போல் மெளனமாகத் தலையை அசைத்தார்கள்.

அக்பரின் கோபமும் ஒருவாறு தணிந்தது. ‘எந்த வீட்டிலும் குழந்தைகளின் தொந்தரவு  பொறுக்க முடியவில்லைதான். முடிவில் குழந்தைகளின் பிடிவாதமே வெற்றி பெறுகின் றது; தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறை வுதான். கரும்புச் சக்கையை மீண்டும் கரும்பாக்க பீர்பால் என்ன, தெய்வமா?’ என்றார் அக்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top