Home » பொது » இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படாத மனிதர் நேதாஜி!!!
இறப்பு சான்றிதழ்    கொடுக்கப்படாத மனிதர் நேதாஜி!!!

இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படாத மனிதர் நேதாஜி!!!

நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல …” என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்….

சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்.,

அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டு துறந்தவர் .

ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்த்தவர். இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்தியா மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த கணமே அந்த பதிவையே துறந்தவர்.

குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களவை 35 வயதில், ‘தேவையில்லை’ என தேசத்திற்காக அற்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42 வயதில் வெற்றி பெற்ற போதும் அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனயே அந்த பதவியே தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44 வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85,000 வீரர்கள் கொண்ட இந்தியா தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர். அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்…

நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு 1939 ஆண்டு வருகை தங்கியுள்ளார்.

தேச பக்தரான அய்யசாமி என்ற பொறியாளர், 1930-ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தாங்கினார் நேதாஜி

இப்போது, அய்யசாமியின் பேரனன. எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுக்காத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கிருந்த போது ஆன செலவு,தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போடுகிறது.

கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும் இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது கான்கிரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

ஆகஸ்ட் 18 ,
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18
நமது தேச தந்தை நேதாஜி பயணித்த விமானம் தைவானில் விபத்துக்குள்ளான தினம் 68ம் ஆண்டு அஞ்சலி !! 

இந்திய பிரஜைகளில் இதுவரை
இறப்பு சான்றிதழ்
கொடுக்கப்படாத மனிதர்
நேதாஜி!

சுபாஷ் சந்திரபோஸ்

ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top