தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்நேதாஜி . நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து
வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக
ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும்
போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள்
மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை
நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும்,
சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும்
இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி
தனக்குப் பெரிய இழப்பு என்று
பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து
உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
அதனால், அவரைச் சமாதானப்படுத்த
நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து
விலக்கப்பட்டார். அப்போது அவர்
ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!
அக்கட்சிக்கு தென்னிந்தியாவில் ஆதரவளித்த
ஒரே தலைவர் பசும்பொன்
உ.முத்துராமலிங்க தேவர். தேவர் என் உடன்
பிறவா சகோதரர் என்று நேதாஜி
வெளிப்படையாகவே பாராட்டினார். எனவே
அவரையே தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக்
இன் தலைவராக்கினார் நேதாஜி. காந்தி
மற்றும் ஒட்டுமொத்த காங்ரஸ் ஏ நேதாஜியை எதிர்த்த அக்காலகட்டத்தில்
இந்திய விடுதலைக்கு நேதாஜியுடன்
இணைந்து பெரிதும் பாடுபட்டவர்கள் “
தென்னிந்திய நேதாஜி” என்று அழைக்கப்பட்ட
பசும்பொன் தேவரும் அவரது பல கோடி
உறவினர்களும்
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர் ” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…
ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!