Home » 2016 » January » 18

Daily Archives: January 18, 2016

மின்னல் வேக மாற்றம்!

மின்னல் வேக மாற்றம்!

* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம். * மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில். * உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. “நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய். * கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் ... Read More »

பாரத தேசம்!!!

பாரத தேசம்!!!

ராகம்–புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத) 2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்; சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத) 3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் ... Read More »

தமிழ்மொழி

தமிழ்மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.  1 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!  2 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் ... Read More »

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடு

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே  (செந்தமிழ்) 2. வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு  (செந்தமிழ்) 3. காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி-என மேவி யாறு பலவோடத்-திரு மேனி செழித்த தமிழ்நாடு.  (செந்தமிழ்) 4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ்நாடு. ... Read More »

இளமையிலேயே ஆன்மிகம்!!!

இளமையிலேயே ஆன்மிகம்!!!

* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம். * நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். * புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள். * ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு ... Read More »

Scroll To Top