Home » விவேகானந்தர் » செயலில் அன்பிருக்கட்டும்!
செயலில் அன்பிருக்கட்டும்!

செயலில் அன்பிருக்கட்டும்!

* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் விதத்தில் வாழுங்கள்.

* அறிவோடு ஒன்றிவிடும்போது தான் பிழைகளைப் போக்க முடியும். இந்த முடிவை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.

* தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.

* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.

* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு உண்டு. அதனால் வேண்டியதை ஏற்கவும், வேண்டாதவற்றை தள்ளவும் செய்யுங்கள்.

* கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.

* ஒன்றைப் பெற்றுக் கொள்பவனுக்குப் பெருமைஇல்லை. கொடுப்பவன் தான் பேறு பெற்றவனாகிறான்.

* முதலில் ஒன்றைக் கேளுங்கள். பிறகு புரிந்து கொள்ளுங்கள். பின், எல்லா சஞ்சலங்களையும் விட்டு, புறஆதிக்கம் எதுவும் அணுகாதபடி மனதை மூடி வையுங்கள். அப்போது உள்ளத்திற்குள் உண்மை என்னும் பிரகாசம் ஒளிர்வதை உணர்வீர்கள்.

* பயமும், நிறைவேறாத ஆசைகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். தனக்கு மரணமில்லை என்பதை அறியும்போது தான் இந்த பய உணர்வு நம்மை விட்டு அகலும்.

* மனிதன் கைம்மாறு கிடைக்கும் இடத்தில் மட்டுமே அன்பு காட்டுகிறான். எல்லாரிடமும் அன்பு காட்டுவதே முறையானது.

* ஆன்மிக நெறியில் பக்குவப்பட்ட மனிதர்கள் கைம்மாறு கருதாமல் அன்பை வெளிப்படுத்துவர். அவர்கள் கடவுளின் அருளைப் பெறும் தகுதியைப் பெறுகிறார்கள்.

* பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களை நன்மையோ, தீமையோ எதுவும் நெருங்க முடியாது. சுயநலமே நன்மை, தீமை என்ற வேறுபாட்டை உருவாக்குகிறது.

 விவேகானந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top