ஒரு ஊரிலை ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் தினமும் பிச்சை எடுத்தே வயிற்றை வளப்பான்
ஒருநாள் அவன் தெரு வீதீ அருகே இருந்த வீட்டு வாசலில் நின்று ”பசிக்குதம்மா” ”பிச்சை போடுங்கம்மா” என்று கேட்டான்
வீட்டுக்காற எசமானி எட்டிப்பாத்தாள் பிச்சைக் க்காரன் வயிற்றைத் தடவிக் கொண்டு பசிக்குதம்மா ஏதன் சாப்பாடு இருந்தா தாருங்கம்ம என்று கேட்டான்
எசமானி வீட்டில் இருந்த சாப்பாட்டில் கொஞ்சத்தை அவருக்கு கொடுத்தாள்
மறுநாளும் அந்த பிச்சைக்காறன் அந்த வீட்டிற்குச் சென்று வழமைபோல் பசிக்குதம்மா சாப்பாடு இருந்தா தாங்கம்மா என்று கேட்டான்
எசமானி அன்றும் சாப்படு குடுத்து அனுப்பினாள்
மறுநாளும் அந்த பிச்சைக்காறன் அந்த வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான். எசமானி சாப்பாட்டைக் குடுக்கும்போது அம்மா இந்த புத்தகத்தை கொஞ்சம் படியுங்கமா என்று ஒரு புஸ்தகத்தை கொடுத்தான்
எசமானி அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தள். அதில்”அறுசுவை உணவு சமைப்பது எப்படி” என சமையல் முறை எழுதப்பட்டு இருந்த்து.
மறுநாள் பிச்சைக்காரனுக்கு என்ன நடந்திருக்கும்………