சும்மா ஒரு வெட்டி வேலை: நான் விஜயகாந்த் அல்ல புள்ளிவிபரங்களை சரியாகச் சொல்ல….
தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை தோரயமாக 53722
அதில் 50 பிள்ளைகள் வருடத்துக்கு புதிதாக சேருவதாக வைத்துக் கொள்வோம்
டொனேசன் மினிமம் 20000 வைத்துக் கொள்வோம்
மொத்த டொனேசன் : 25000 * 50 * 20000 = 2500,00,00,000 ரூபாய் தமிழகத்தில் மட்டும் ஒருவடத்திற்கு. இது அனைத்தும் வெள்ளைப் பணமா? இல்லை. இது இந்திய அளவிக் கணக்கிட்டால்?
மேலே சொன்னது மினிமம் கலெக்சன்.
கல்லூரியில் இஞ்சினீரிங் மட்டும் எடுப்போம்
மொத்த பொறியியல் கல்லூரிகள்: 250
இந்தவருடம் சேர்ந்தவர்கள்: 1,11,000
அதில் 50000 பேர் கேப்பிடேசனின் சேர்ந்தவர்கள் என எடுப்போம்.
மினிமம் கேபிடேசன் பீஸ் தோரயமாக 2,00,000
மொத்த கலெக்சன்: 50000 * 2,00,000 = 1000,00,00,000
இதில் மற்ற கல்லூரிகளையும், இந்திய அளவில் எடுத்தால் வரும் கலெக்சன்?
கருப்பு பணம் இல்லையென்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்க படும் என்று எங்கோ படித்ததாக நியாபகம்