திருடாதே!
ரத்னாகரர் என்பவர் திருடி பொருள் சேர்த்தார். ஒருமுறை காட்டு வழியே வந்த ஏழு ரிஷிகளை மறித்தார்.
அவர்களில் ஒரு ரிஷி””அப்பனே! பொருள் வேண்டியா எங்களைத் தடுத்தாய். உணவு கூட அன்றாடம் கிடைத்தால் தான் உண்போம். இல்லாவிட்டால் பட்டினி கிடப்போம். எங்களிடம் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? அது சரி…எதற்காக திருடுகிறாய்?” என்று கேட்டார்.
“”சுவாமி! என் குடும்பம் பெரியது. அவர்களுக்கு உணவிடவே திருடுகிறேன்,” என்றார் ரத்னாகரர்.
“”குடும்பம் பெரிது என்பதற்காக திருடுவது பாவமல்லவா! உன்னிடம் பொருளை இழக்கும் குடும்பங்கள் விடும் சாபம், உன்னை ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வந்து வருத்துமே!” என்ற முனிவர்களிடம்,”” நான் என்ன தான் செய்ய!” என கேட்டார் ரத்னாகரர்.
“”ரத்னகரா! நீ உனக்கு சேரும் பாவத்தை உன் குடும்பத்தினருக்கு பங்கிட்டு தருவதாகச் சொல். அவர்கள் பதில் சொல்வதைப் பொறுத்து முடிவெடு” என்றார்கள்.
ரத்னாகரரும் அவ்வாறே செய்ய, குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். தன்னை பணத்துக்காக மட்டுமே தன் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர் என்று உணர்ந்தவர் திருட்டுத் தொழிலை விட்டு விட்டார்.
ரிஷிகள் மூலம் “ராம’ மந்திரத்தை உபதேசம் பெற்று தவமிருந்தார். புற்று அவரை மூடியது.
“வால்மீகம்’ என்றால் “புற்று’. அதனால் “வால்மீகி’ என்ற பெயர் பெற்று ராமாயண காவியத்தை எழுதும் பாக்கியம் பெற்றார்.