சட்டசபைக்குள் முட்டல் மோதல் காங்கிரசில் இரு பிரிவினர் இருந்தனர் என்பது ஊரறிந்த விஷயம் அல்லவா? அப்போதைய சுயராஜ்ய கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் சி.ஆர்.தாஸ். மிகத் திறமையான வழக்கறிஞர், வங்காளம் தந்த சிறந்த தேசபக்தர்களுள் ஒருவர். அரவிந்தரும் வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு புரட்சிக்காரராக விளங்கியவர். இவர் மீது அலிப்பூர் சதிவழக்கு என்ற பெயரில் ஒரு வெடிகுண்டு வழக்கைத் தொடுத்து இவரை எப்படியாவது சிறையில் தள்ளிவிட பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்து அவரை சிறைபிடித்தது. அப்போது அரவிந்தர் ... Read More »
Monthly Archives: May 2015
சுதந்திர கர்ஜனை – 19
May 5, 2015
வைக்கம் போராட்டம் 1925-ல் காந்திஜி விடுதலையாகி வெளியில் வந்தவுடன் தேசபக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. சட்டசபைக்குச் செல்லவேண்டுமென்ற கட்சியார் ‘சுயராஜ்ய கட்சியார்’ என அழைக்கப்பட்டனர். இந்த சுயராஜ்யக் கட்சியார் பல மாகாணங்களில் வெற்றி பெற்று மாகாண சட்டமன்றங்களுக்குள் சென்று விவாதங்களில் ஈடுபடலாயினர். மத்திய மாகாணம், வங்காளம் ஆகிய மாகாணங் களில் சுயராஜ்யக் கட்சியார் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டனர். அங்கெல்லாம் இரட்டை ஆட்சி முறை தொடங்கப்பட்டது. ஆட்சியில் சட்டமன்றத்தில் சில துறைகளும், கவர்னரின் நேரடிக் கண்காணிப்பில் சில துறைகளும் இயங்கும் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 18
May 5, 2015
சட்ட மன்றங்களில் சுதேசிகள் அகமதாபாத் நீதிமன்றத்தில் செளரி சாவ்ரா நிகழ்ச்சிகளுக்காக காந்திஜியைக் கைது செய்து வழக்கு தொடுத்தார்களல்லவா? அப்போது காந்திஜி அளித்த வாக்குமூலம் மிகவும் பிரசித்தமானது. அப்படி அந்த வாக்கு மூலத்தில் காந்தி என்ன தான் சொன்னார்? அவர் சொன்னதன் மூலக் கருத்து, ராஜ விசுவாசியாக இருந்த தான் எப்படி ராஜத் துரோகியாக மாறினேன் என்பது தான். அந்த வாக்குமூலத்தின் முழு நகலும் நமக்குக் கிடைக்குமானால் அது மிக அரியதொரு ஆவணமாகத் திகழும். இந்த வழக்கு விசாரணை ... Read More »
சுதந்திர கர்ஜனை – 17
May 5, 2015
முரசு கொட்டி வந்த புதிய போர்முறை மகாத்மா காந்தி அறிமுகம் செய்த புதிய போர்முறை ‘ஒத்துழையாமை இயக்கம்’ தொடங்கிய ஆண்டு 1920. அரசியல் கட்சிகளுக்கிடையே பிளவுகள் தோன்றின. முந்தைய ஆண்டே மிதவாத காங்கிரசார் தனித்துச் சென்றுவிட்டனர்; கல்கத்தாவில் தனி மகாநாட்டையும் நடத்தினர். அமிர்தசரஸ் காங்கிரசில் விவாதிக்கப்பட்ட- பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து சலுகைகள் பெறுவதா, அல்லது ஒத்துழையாமை இயக்கம் நடத்தி தங்கள் உரிமைகளைக் கோரி போராடுவதா? இது தான் பிரச்னை. முதலில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து உரிமைகளை வேண்டிப் பெறுவோம் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 16
May 5, 2015
வணக்கத்துக்குரிய தலைவர்கள் சென்ற பகுதியில் குறிப்பிட்ட ஐந்து பெருந்தலைவர்களைத் தொடர்ந்து மேலும் சில தலைவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். 6. ஃபக்ருதீன் தயாப்ஜி இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி மூன்றாம் ஆண்டிலேயே காங்கிரசுக்குத் தலைமை ஏற்றவர் இந்த ஃபக்ருதீன் தயாப்ஜி. தீவிரமான சிந்தனைகளைக் கொண்டவர் இவர். வழக்கம் போல அந்தக் கால காங்கிரசாரில் வழக்கறிஞராக இருக்கும் புகழ்மிக்கத் தலைவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வழக்கத்தையொட்டி இவரும் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார். ... Read More »
சுதந்திர கர்ஜனை – 15
May 5, 2015
ஒற்றுமை காங்கிரஸ் சூரத் காங்கிரசில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் இரு தனிக் கட்சிகளாகப் பிரிந்தது. தீவிரவாத காங்கிரசார் கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டார். அரவிந்தரும் சதி வழக்கொன்றில் கைதானார். வ.உ.சி மீதும் நெல்லை சதி வழக்கொன்று போடப்பட்டு கடும் தண்டனை பெற்று சிறை சென்றார். சுப்பிரமணிய சிவா 6 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்றார். இப்படி தீவிரவாத காங்கிரசார் சிறைக் கொட்டடியில் வீழ்ந்து கிடந்த காலத்தில், மிதவாத காங்கிரசார் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 36
May 5, 2015
தற்காலிக இந்திய சுதந்திர சர்க்கார் பிரகடனம் முந்தைய சில பகுதிகளில் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது தமிழகத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகள் பற்றி பார்த்தோம். இவை இந்த நாடு முழுதும் நடந்த புரட்சி எப்படி நடந்தது என்பதை விளக்குவதற்காக நமக்குப் பழக்கமான ஊர்களில் நடந்தவற்றை மட்டும் எடுத்துக் காட்டினோம். இனி நாட்டின் நிலை என்ன, காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன, பிரிட்டிஷ் பேரரசின் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றியும் சிறிது பார்க்கலாம். 1942 ஆகஸ்ட் 9-ஆம் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 14
May 5, 2015
காங்கிரசில் ராஜ விசுவாசிகள் 1885-இல் பம்பாயில் நடந்த முதல் காங்கிரசில் தீர்மானித்தபடி 1886-இல் கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் நடந்தது. தேசபக்தர் பாலகங்காதர திலகர் முதன்முதலாக இந்த காங்கிரசில் தான் பங்கு கொண்டார். தொடர்ந்து அதற்கு அடுத்த வருஷம் 1887-இல் காங்கிரஸ் சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்தது. இதற்குத் தலைமை வகித்தவர் பக்ருதீன் தயாப்ஜி. இதில் சேலம் விஜயராகவாச்சாரியர் தமிழில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். அந்தப் பிரசுரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதல் இரு மாநாட்டிலும் ஆங்கிலமே ... Read More »
சுதந்திர கர்ஜனை – 13
May 5, 2015
இந்தியர்களுக்கென்ற ஓர் அமைப்பு தேவைப்பட்டது! 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரின் முடிவில் இந்திய சிப்பாய்களை அடக்கி, ஒடுக்கி, படுகொலைகளைச் செய்து முடித்து, இந்தியாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் பிரிட்டிஷ் அரசி விக்டோரிய மகாராணியர் இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அப்படி விக்டோரியா மகாராணியார் இந்தியாவுக்கும் மகாராணி என்று ஆனதைக் கொண்டாடும் விதத்தில் 1877-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏக சக்ரவர்த்தினியாக முடிசூட்டிக் கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார். இந்தியாவில் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 12
May 5, 2015
‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பிறந்தது இனி சுதந்திரத்துக்காகப் போராடிய ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பிறந்து வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம். ‘காங்கிரஸ்’என்று இங்கு குறிப்பிடும் சொல்லுக்கும் இன்று இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். இங்கு ‘காங்கிரஸ்’ என்னும் சொல் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுக் கொடுத்து சலுகை பெறும் படித்த இந்தியர்கள் தொடங்கிய ஒரு அமைப்பைக் குறிக்கும் சொல். 1857-இல் நடந்த முதல் சுதந்திரப் போரிலிருந்து ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்ட பாடம், இனியும் இந்தியர்களை ... Read More »