ரோபோக்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்று சொன்னால் அது மிகையாகாது. தன்னுடைய ‘ஜீனோ’ மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ரோபோ என்கிற வார்த்தையை பிரபலமாக்கினார். “ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார். கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், காலம் காலமாக மனிதர்கள் ரோபோக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அல் சசாரி என்றவர் ... Read More »