பெரிய நகரங்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பத்தை அல்லது அமைப்பைக் கண்டிருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகியன. ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். ... Read More »