போன்ஹாமுக்குப் பிறகு வில்லியம் ஜான் பட்டர்வொர்த் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1843 ஆம் ஆண்டிலிருந்து 1855 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர், மலாக்கா, பினாங் என்ற மூன்று நகரங்களுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டார். இந்திய இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றியவர். இவர் பொறுப்பெடுத்துக் கொண்ட காலம், அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவோடு இருந்த சுமுக உறவு ஒரு முடிவுக்கு வந்தது.
எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆட்சி செய்பவரால் சொல்ல முடியாது என்ற சூழலினால் இந்தப் பதவிக்கு யாரும் வர விரும்பவில்லை. நீதி, சட்டம்- ஒழுங்கு, நிர்வாகம் போன்ற எந்தத் துறையிலும் ஆளுநர் சுயேச்சையாகச் செயல்பட முடியாது. எந்த முடிவும் கல்கத்தாவிலிருந்து தான் வர வேண்டும் என்பதால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது.
இதனால் உள்ளூரில் சட்டத்தையும், ஒழுங்கையும் கட்டிக் காக்க கௌரவ நீதிபதிகளாகச் செயலாற்றியவர்கள் தங்களுக்கு எந்த வித அதிகாரமும் அங்கீகாரமும் கிடைக்காது என்று தெரிந்து தங்கள் வேலையை ராஜினாமா செய்தார்கள். இதற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த யாரும் இந்த வேலையைச் செய்ய முன்வரவில்லை. இப்படிப்பட்ட நெருக்கடிகளிலும் பட்டர்வொர்த் சமாளித்து ஆளுநராக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
அடுத்த ஆளுநர் எட்மண்ட் பிளண்டுல் (EDMUND BLUNDELL). அப்போது ஸ்ட்ரெயிட்ஸ் ஸெட்டில்மெண்ட் என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மூத்த அரசாங்க ஊழியர் இவர். மலாக்கா நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கப் பிரதிநிதியாக நீண்ட நாட்கள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்திய ஆளுநர். தான் சொல்வதை எந்தக் கேள்விகளும் கேட்காமல் எல்லோரும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற ஆணவத்துடன் நடந்து கொண்டார்.
இத்தகைய ஆணவமான போக்கினால் செய்திப்பத்திரிகைகளால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். ஐரோப்பிய வணிகர்கள் பலர் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகக் கொள்கைகளில் அதிருப்தி அடைந்தனர். பல ஐரோப்பிய வணிகர்கள் வெளிப்படையாக அதைத் தெரிவித்தனர். அனைவரும் ஒன்று திரண்டு பெரிய கூட்டங்கள் நடத்தினர். கடல் கொள்ளைகள் பல தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன.
இதற்கு கிழக்கிந்தியக் கம்பெனி முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும், பல ஐரோப்பியக் கைதிகள் வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டதை எதிர்த்தும், இந்திய நீதிமன்றத்திலிருந்து காலதாம்மாகக கிடைத்த தீர்ப்புகளை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.
இப்படிப் பல கசப்பான நிகழ்வுகளுக்கு நடுவில் சிங்கப்பூர் துறைமுகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் துறைமுகக் கட்டணமும், ஆவணங்களைச் சரி பார்த்து அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதற்கும் கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்தார். ஆனால் இவை தேவையில்லை என்று பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை முற்றிலுமாக இழந்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுநர்கள் மூலம் செய்யும் நிர்வாகம் தேவையில்லை என்று மனு லண்டனுக்கு அனுப்பப்பட்டது. இங்கிலாந்து அரசாங்கம் லண்டனிலிருந்து நேரிடையாக ஆட்சி செய்யவேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஐரோப்பிய வணிகர்கள் பல மனுக்கள் அனுப்பினார்கள்.
இந்தியாவிலிருந்து கடைசியாக அனுப்பப்பட்ட ஆளுநர் ஒரிஃபர் கெவன்னாக். இவர் 1859 ஆம் ஆண்டிலிருந்து 1867 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவருடன் இந்தியாவிலிருந்து ஆளுநரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் முறை ஒரு முடிவுக்கு வந்தது. அதனால் கல்கத்தாவிலிருந்து ஆட்சி செய்யும் முறையும் ஒரு முடிவுக்கு வந்தது எனலாம்.
ஆனால் ஒரிஃபர் கெவன்னாக்நேர்மையான மனிதராகவும், மக்களின்மேல் பேரன்பு கொண்டவராகவும்இருந்தார். மக்கள் அனைவரும்அவரை விரும்பினர். பொதுமக்களிடையேநேரிடையாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் கருத்துகளைக்கேட்டறிந்து பல முடிவுகள்எடுத்தார். இதனால் வர்த்தகர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளும்உரசல்களும் பெருமளவில் குறைந்தன.வர்த்தகர்களுக்குத் தேவையானஉதவிகளை சட்டபூர்வமாக அங்கீகாரம்பெற்று உதவினார்.
பொதுப் பணித்துறை, காவல் துறை, சிறைச்சாலை, நகர நிர்வாகம் என்று பல துறைகளிலும்மேம்பாடுகள் செய்தார். இவரதுஆட்சியின்போது தண்டனை பெற்றசிறைக்கைதிகளைப் பொதுப் பணித்துறைவேலைகளில் ஈடுபடுத்தினார். இதனால் நகரத்திற்கு அப்பால்அமைந்திருந்த பல சிறு சிறுகுடியிருப்புப் பகுதிகளுக்கும், அரசாங்க விடுதிகளுக்கும், செலெட்டார், சாங்கி போன்ற தொலைவில்இருந்த வட்டாரங்களுக்கும்சாலைகள் போடப்பட்டன.
இதனால்அந்த வட்டாரங்களுக்கு போக்குவரத்துவசதிகள் கிடைத்தன. ஃபோர்ட்கெனிங், செயிண்ட் ஆண்ட்ரூஸ்கதீட்ரல், நார்த் பிரிட்ஜ்சாலையையும், சௌத் பிர்ட்ஜ்சாலையையும் இணைக்கும் எல்கின்பாலம், பல மருத்துவமனைகள் போன்றபல கட்டடங்கள் கட்டப்பட்டன.அரசாங்கத்துக்குச் சொந்தமானஆளுநர் மாளிகை (இன்று இஸ்தானாஎன்று அழைக்கப்படுகிறது), டவுன் ஹால் (விக்டோரியா மெமோரியல்ஹால்), எம்பரஸ் பிளேஸ் என்றுஅழைக்கப்படும் நகர சதுக்கத்தின்மையப்பகுதி கைதிகளைக் கொண்டுகட்டப்பட்டவை.
1840 ஆம் ஆண்டிலிருந்து குழப்பமான நிர்வாகத்தினாலும், கல்கத்தாவிலிருந்து அனுமதி பெற காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாலும் ஆளுநர்கள் பலர் வணிகர்களின் ஆதரவைப் பெறாமல் நகர வளர்ச்சிக்குத் தேவையான நிதியுதவியைப் பெற முடியவில்லை. கெவன்னாக்குக்கு வணிகர்களும், வர்த்தக சபையும், ஊடகங்களும் தங்கள் ஆதரவை வழங்கி வந்ததால் கிழக்கிந்தியக் கம்பெனி வழங்கிய மிகக் குறைவான நிதியுதவியுடன் வர்த்தகர்கள் செய்த நிதியுதவியினால் நகரம் மேலும் வளர்ந்து பல முன்னேற்றங்களைக் கண்டது. சிறப்பாகப் பணியாற்றினாலும் சிங்கப்பூர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்திலிருந்து நேரிடையாக ஆங்கில அரசாங்க அதிகாரத்திற்கு மாறியதால், 1867ஆம் ஆண்டு 46 வயதில் கெவன்னாக் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.
1867 ஆம் ஆண்டிலிருந்து 1873 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய அரசால் முதன் முதலில் நியமிக்கப்பட்ட ஆளுநர் சர் ஹாரி செயிண்ட் ஜார்ஜ் ஓர்ட். இவர் இராணுவத் தளபதியாகப் பணி புரிந்தவர். இவர் பொறுப்பேற்றுக் கொண்ட காலம் சிங்கப்பூர் பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சி கண்டது.
பல நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தினார். 1869 ஆம் ஆண்டு வாம்புவா என்ற ஆசியரை முதன் முதலாக நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக நியமித்தார். குற்றக் கண்காணிப்பு, மற்றும் தண்டனை வழங்கும் முறைகள் பற்றிய செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜுரிகள் குழுவின் மூலம் தீர்ப்பு வழங்கும் முறை நீக்கப்படவேண்டும் என்றும் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தினார். மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அமைத்தார்.
சர் ஆண்ட்ரூ கிளர்க் 1873 ஆம் ஆண்டிலிருந்து 1875 ஆம் ஆண்டிலிருந்து ஆளுநராகப் பணியாற்றினார். மலேயா முழுவதும் ஆங்கிலேயர்கள், பிரிட்டன் நாட்டின் தாக்கம் எற்பட முக்கியக் காரணமாக இருந்தவர். ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட் என்று அழைக்கப்பட்டப் பகுதிகள் நீங்கலாக மலேயா முழுவதும் ஆங்கில அரசின் ஆட்சி பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
வர்த்தகர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து ஆங்கில அரசாங்க ஆட்சியில் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு சூழலை உருவாக்கினார். 1874 ஆம் ஆண்டு கூலி வேலைக்கு வந்தவர்களைத் துன்புறுத்தி அடிமைகளாக நடத்தியவர்களைக் கண்காணித்து சட்டபூர்வமாக இந்தக் கொடுமைகளைத் தடை செய்தார். இதற்கு சீன வர்த்தகர்களும், ஐரோப்பிய வணிகர்களும் பெரும் அளவில் ஆதரவு தந்தனர்.
சர் வில்லியம் டிரம்மோண்ட் ஜெர்வோயிஸ் 1875 ஆம் ஆண்டிலிருந்து1877 ஆம் ஆண்டு வரை ஆளுநராகப் பொறுப்பேற்றார். 1877 ஆம் ஆண்டு சீனாவிலிருந்துவரும் கூலித் தொழிலாளிகளின்பாதுகாப்புக்கு சீன நாடும்கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தது. புதிதாக சிங்கப்பூருக்குவரும் குடியேறிகளுக்கு அரசாங்கப்பாதுகாப்பும் கடுமையான கட்டுப்பாட்டுவிதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
1877 ஆம் ஆண்டிலிருந்து 1879 ஆண்டு வரை ஆண்ட சர் வில்லியம் கிளீவர் ஃபிரான்ஸிஸ் ராபின்சன் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை. நகரம் முழுவதற்கும் குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் போடப்பட்டன. தஞ்சோங்பாகரில் கப்பல் பழுது பார்க்கும் இடங்கள் உருவாக்கி அவை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டன.
சர் ஃபிரெட்ரிக் வெல்ட் 1880-1887: சிங்கப்பூரில் நூலகம் மற்றும் ராஃபிள்ஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டன.
: சிங்கப்பூரில் நூலகம் மற்றும்ராஃபிள்ஸ் அருங்காட்சியகம்திறக்கப்பட்டன
சர் சிசில் கிளமென்டி ஸ்மித்: சீன மொழியிலும் இலக்கியத்திலும் அறிஞர். பிரிட்டிஷ் அரசாங்கப் பணியில் 1864 ஆம் ஆண்டு சேர்ந்து காலனி நாடுகளின் நிர்வாகத்தில் செயலாளராகப் பணியாற்றியவர். 1887 ஆம் ஆண்டிலிருந்து 1893 ஆம் ஆண்டு வரை ஆளுநராகப் பணியாற்றியவர்.
சீன மொழியிலும் இலக்கியத்திலும்அறிஞர்பிரிட்டிஷ் அரசாங்கப்பணியில் ஆம் ஆண்டு சேர்ந்துகாலனி நாடுகளின் நிர்வாகத்தில்செயலாளராகப் பணியாற்றியவர்ஆம் ஆண்டிலிருந்து ஆம்ஆண்டு வரை ஆளுநராகப் பணியாற்றியவர்
இவர் ஆளுநராகப் பணிபுரிந்தபோது தான் ஹென்றி ரிட்லி தாவரவியல்தோட்டத்திற்கு இயக்குனராகவேலைக்குச் சேர்ந்தார். அவர்ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர்பால் எடுப்பதற்கு எளிமையானவழிகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில்ஈடுபட்டார். ரிட்லியின் முயற்சியினால்தான் மலேயா, சிங்கப்பூர் இரண்டுநாடுகளிலும் ரப்பர் மரங்கள்வளர்க்கப்பட்டன.
19 ஆம் நூற்றாண்டின்இறுதியில் நிகழ்ந்த இந்த ஆராய்ச்சியினால்ரப்பர் என்ற அரிய பொருள் சந்தைக்குவந்தது. பல வகையான வாகனங்கள்கண்டுபிடிக்கப்பட்டன. அந்தவாகனங்களுக்கு ரப்பர் பொருத்தப்பட்டசக்கரங்கள் உருவானதும் இந்தக்காலகட்டத்தில்தான்! மலேயாமுழுவதும் ரப்பர் தோட்டத்தொழிலாளிகளாக இந்தியர்கள்குடியேறத் தொடங்கி, இன்றும்மலேசிய இந்தியர் வரலாற்றில்ரப்பர் தோட்ட வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடாதவர்கள்கிடையாது என்று சொல்லும் அளவிற்குத்தோட்ட வாழ்க்கை அழியாதநினைவுகளாய் மலேசியத் தமிழர்கள்மனதில் நிலைத்திருக்கிறது.
சீனக் குடியேறிகள் பலர் ரகசியக் குழுக்களை உருவாக்கினார். இந்த ரகசியக் குழுக்களின் முக்கிய வேலை புதியக் குடியேறிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்று கூறிக் கொண்டு அந்த ஏழைத் தொழிலாளிகளை மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தனர். சிசில் கிளமெண்டி ரகசிய குழுக்களுக்கு தடை விதித்தார். அனைத்து ரகசிய குழுக்களையும் கலைத்தார். ஆனால் அவர்கள் மீண்டும் சிறு குழுக்களாகப் பிரிந்து தொழிலாளிகளை மிரட்டிப் பணம் பறித்துக் கொண்டிருந்தனர்.
தொடரும்…