மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர்.
சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, திகைப்படைந்ததனர்.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த வெடி குண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்
1933-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெடிகுண்டை அருகாமையில் உள்ள துத்குன்டி காட்டில் செயலிழக்க வைக்கும் முயறசியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.