Home » 2015 » April (page 7)

Monthly Archives: April 2015

பருவநட்சத்திரங்கள் – 3

(ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.) அந்த ஒருவர் 70 வயதுடைய ஒரு முதியவர். 70 வயது என்று சொல்ல முடியாத அளவு 60 வயது போல் இருந்தது அவரது உடலமைப்பு. சிலையாய் நின்ற கலாவின் கண்களில் வட்ட வட்டமாய் சுழலும் அந்த கால திரைப்பட பாணியில் ஒரு சுழல் வந்து 10 வருடம் பின்னோக்கி பழைய நினைவுகளை தோண்டி எடுக்கத் துவங்கியிருந்தது. அந்த பெரியவரின் முகம் மறக்கவே முடியாமல் இன்னும் கலாவின் நினைவில் அப்படியே இருந்தது. ... Read More »

பருவநட்சத்திரங்கள் – 2

கோயிலுக்குள் நுழைந்த கலா பயத்துடனே பிரகாரத்தைப் பார்த்தாள். இருபுறமும் ஆல மரத்தாலும் வேப்ப மரத்தாலும் சூழப்பட்டு கீழே இலைகளின் காய்ந்த சருகுகள் மண்டி மண்ணோடு மண்ணாக மட்க எத்தனித்துக் கிடந்தன. அரண்ட கலாவின் கண்களுக்கு சருகுகளும் அரவமாய் தெரிந்தன. மெல்ல திரும்பி பின்னால் பார்த்தாள் கலா. துரத்திய பாம்பு வாயிற்படியைத் தாண்டி நுழைந்து ஆக்ரோசமாய் சீறியபடி அவள் நோக்கிவந்து கொண்டிருந்தது. கோயிலில் கற்ப கிரகம் பூட்டி யாருமில்லாமல் இருந்ததால்… கோயிலில் பின் பக்கம் நோக்கி அதிகரிக்கும் இதயத்துடிப்புடனே ... Read More »

பருவநட்சத்திரங்கள் – 1

‘கலா குட்டி…!! எங்கடா இருக்கே??’ என்று தன் மனைவியை கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் காமேஷ். அடுப்படியில் தம் பிரிய கணவருக்காக கேசரி செய்து இறக்கிய கலா, ‘இதோ வர்றேங்க..!!’ என்று கூறிய வண்ணமே முகப்பு அறைக்கு வந்து நின்றாள். ‘இந்தா..!! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாரு டா…?!!’ ‘எதுக்குங்க இப்ப பட்டுபுடவை எல்லாம்? அதான் வீட்ல நிறைய இருக்கே! நாம ஏற்கனவே முடிவு செஞ்சதை மறந்துட்டீங்களா?’ ‘என்ன முடிவு???’ என்று புருவத்தை உயர்த்தி யோசிக்கலானான் ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 14 (கருந்துளையில் ஹோலோகிராம் – Holographic Universe)

கருந்துளை மிகச் சிறிதாக இருந்து தனக்கு அருகே வருபவற்றை ஒவ்வொன்றாக விழுங்குவதால், தன் உருவத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறது. அதிக உணவை உண்பதால் நாம் பெருப்பது போல. கருந்துளைக்கு உணவாக இருப்பவை நட்சத்திரங்களும், கோள்களும், நெபுலாக்களும் ஆகும். நட்சத்திரமாக இருந்தாலென்ன, கோள்களாக இருந்தாலென்ன, நீங்களாக இருந்தாலென்ன, ஒரு நாய்க்குட்டியாக இருந்தாலென்ன அனைத்தும் அணுக்களின் கட்டமைப்பினாலேயே உருவாக்கப்பட்டவை. ஏதோ ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குடன் கூடிய ஒரு கட்டமைப்பின் மூலம் இவையெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் உருவத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 13 (கருந்துளையில் ஹோலோகிராம் – Holographic Universe)

கருந்துளையொன்றுக்கு அருகே செல்லும் அனைத்தும், முடிவில்லா ஈர்ப்புவிசையால் அதன் மையத்திலிருக்கும் ஒருமைப் புள்ளியை (Singularity) நோக்கி இழுக்கப்படும் என்றார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒளி கூட அதன் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிவிட முடியாது. தனக்கு அருகே வரும் எதுவானாலும், அதை உள்ளிழுத்துவிடும். அளவில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கருந்துளையினுள்ளே சென்று, அந்த ஒருமைப் புள்ளியுடன் சங்கமமாகிவிடும். கருந்துளையானது ஆரம்பத்தில் கையளவேயுள்ள மிகமிகச் சிறிய விட்டமுடையதாகத்தான் காணப்படும். அதனுள்ளே விண்வெளியில் உள்ளவை ஒவ்வொன்றாக இழுக்கப்படுவதால், அது படிப்படியாகப் பெரிதாகிப் பிரமாண்டமானதாக மாறிவிடுகின்றது. ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 12 (திரிஷாவும் திவ்யாவும்)

அப்போது என்ன நடக்கும்? கீழே எங்கெல்லாமோ சிதறி விழுந்து கிடக்கும் தாஜ்மஹாலின் ஒவ்வொரு சின்னத் துண்டுகளும், மெதுமெதுவாகச் சேர்ந்து தாஜ்மஹால் உருவம் பெற்று, உங்கள் கைகளை நோக்கி மேலே நகரத் தொடங்கும். நிச்சயம் இந்தக் காட்சியை உங்களால் கற்பனை பண்ண முடியும். விழுந்துடைந்த அதே வடிவத்தில் மீண்டும் அதே தாஜ்மஹால் எப்படி உருவாக முடியும் என்று பார்த்தால், அவையெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்களின் மீளமைப்பு என்பது புரியும். இந்தச் சம்பவத்தில் நடந்த அனைத்தும் சாத்தியம்தான் என்று நவீன ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 11 (திரிஷாவும் திவ்யாவும்)

நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் திரிஷா நடித்துக் கொண்டிருப்பார். படத்தில் திரிஷாவின் காரக்டர் அன்றாடம் நாம் காணும் ஒரு பெண்னின் காரக்டராக இருக்கும். படத்தில் திரிஷவைப் பார்த்தவுடன், ‘அட! நம்ம திவ்யா மாதிரியே அச்சு அசலாகத் திரிஷா இருக்கிறாரே!’ என்று உங்களுக்குத் தோன்றும். ‘திவ்யா’ என்பது உங்கள் உறவுப் பெண்ணாகவோ, நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்ணாகவோ, உங்கள் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும், நீங்கள் ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 10 (நட்சத்திரம் ஒன்றின் இறப்பு )

பல பில்லியன் ஆண்டுகள் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்தில் ஐதரசன் அணுக்கருக்கள் தீர்ந்து போக ஆரம்பிக்கும். அப்போது, ஐதரசன் அணுக்கருக்களுக்கு ஏற்பட்ட பியூஸன் தொடர்ந்து ஹீலியம் அணுக்கருக்களுக்குள் ஏற்பட ஆரம்பிக்கும். ஐதரசன், ஹீலியமாக மாறியது போல, ஹீலியம், கார்பனாக மாற ஆரம்பிக்கும், இது போலவே, கார்பன் ஒக்சிசனாகவும், ஒக்சிசன் சிலிக்கானாகவும், இறுதியாக சிலிக்கான் இரும்பாக மாறும். இரும்புதான் பியூஸனின் இறுதி நிலை. இரும்பு எந்த அணுப்பிணைப்புக்கும் ஆளாகாது. அதனால் ஒரு நட்சத்திரத்தின் முழுக் கோரும் இறுதியாக இரும்பு ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 9 (நட்சத்திரம் ஒன்றின் இறப்பு )

அண்டப் பெருவெளியில் ஒவ்வொரு நொடியும், எங்கோ ஒரு நட்சத்திரம் பிறந்து கொண்டும், இன்னுமொரு நட்சத்திரம் இறந்து கொண்டும் இருக்கின்றன. மனிதர்களின் வாழ்க்கையைப் போலவே ஒரு நட்சத்திரங்களும் பிறந்து, பின்னர் வளர்ந்து, பல காலம் வாழ்ந்து, அதன் பிறகு இறக்கின்றன. இயற்கை நடத்திக் கொண்டிருக்கும் அதிசய நிகழ்வு இது. பிறப்புகளினாலும் இறப்புகளினாலும் தன்னை ஒரு சமநிலைக்கு உட்படுத்தி வைத்துக் கொள்கிறது இயற்கை. ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ‘சுப்பர் நோவா’ (Super Nova) என்னும் பிரமாண்ட நிலையை அடைந்து, ... Read More »

அண்டமும் குவாண்டமும் – 8 (நிகழ்வு எல்லை – Event Horizon )

காட்டாறின் வேகம், நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கீழே விழுவதற்கு சற்று முன்னே ஒரு குறித்த எல்லையில் அதிகரிக்க ஆரம்பிக்கும் அல்லவா? அந்த இடம்தான் கருந்துளையின் ‘நிகழ்வு எல்லை’ என்று சொல்லப்படும் ‘Event Horizon’. அந்த எல்லையில் உலகமகா நீச்சல் வீரனின் வேகமும் சக்தியும், நீர்வீழ்ச்சியின் வேகத்துக்கும் சக்திக்கும் சமமாக இருந்தது என்று பார்த்தோம். அங்கு நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியைப் பொறுத்தவரை பூச்சியமாகிறது என்றும் பார்த்தோம். இப்போது, நீச்சல் வீரனை ஒளியென்று எடுத்தால், நிகழ்வு எல்லையில் ஒளியின் ... Read More »

Scroll To Top