டிவியில் விளம்பரதாரர் மக்களுக்கு பல வகையான பொருட்களை வழங்குகிறார்கள். இதில் எத்தனை மக்களைப் போய் சேருகிறது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம். வீட்டுப் பொருட்கள் டிவி ஃபிரிஜ் வாஷிங் மெஷின் துவங்கி சோப் சீப் கண்ணாடி ஷாம்பு வரை டிவியில் வேலை செய்பவர்களுக்கு தினமும் ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கும். சென்று முறை பெருங்காய வியாபாரி கொடுத்த நிகழ்ச்சியினால் இன்னும் மூன்று மாதத்திற்கு பல வீட்டில் பெருங்காயமே வாங்கத் தேவையில்லை எனும் நிலை. பலரும் உள்ளே ... Read More »
Monthly Archives: April 2015
கடைசி பேட்டி – 17 ( மர்மத் தொடர் )
April 24, 2015
ரவியும் பல முறை போன் செய்துவிட்டான். பதில் இல்லை. ராதிகாவும் அவனுடைய மொபைலில் முயற்சி செய்துவிட்டு அமைதியானாள். ராஜகோபாலுக்கு ஒரே குழப்பம். ராஜேஷையும் காணவில்லை அவனைத் தேடச்சென்ற நந்தினியையும் காணவில்லை. ரெயின் டிவிக்கு செய்தி சென்றடைந்திருந்தது. அவர்களுக்கு ஒரே குதுகலம். சின்ன எழுத்துக்களில் அவர்களுடைய நிகழ்ச்சிகளின் நடுவே ப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அமைச்சர்கள் கொலை. ஒரு பெரிய தொலைக்காட்சியின் நிருபர் கைது. மேலும் விவரங்கள் இல்லை என்று கலக்கிக் கொண்டிருந்தனர். வெறும் வாயயை மெல்லுபவர்களுக்கு அவல் ... Read More »
கடைசி பேட்டி – 16 ( மர்மத் தொடர் )
April 24, 2015
பக்கத்து அறையில் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கும் அவனுடைய பதில்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொய் கண்டுபிடிக்கும் கருவியின் கருத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். உங்கள் பெயர்? ராஜேஷ் – உண்மை உங்கள் அப்பா அம்மா எங்க இருக்காங்க? அமெரிக்காவில். – உண்மை நீங்க எத்தனை வருஷமா சூப்பர் டிவியில் வேலை செஞ்சிகிட்டுஇருக்கீங்க? 6 வருஷமா – உண்மை நீங்க இதுவரைக்கும் யாரையாவது கொலை பண்ணியிருக்கீங்களா? இல்லை. – உண்மை அமைச்சர் நீலவாணனை நீங்க கொலை பண்ணிங்களா? இல்லை – உண்மை ... Read More »
கடைசி பேட்டி – 15 ( மர்மத் தொடர் )
April 24, 2015
ராஜேஷ் மேலிருந்த வொயர்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அவன் அறையில் யாரும் இல்லை. அவன் யோசிக்கத் தொடங்கினான். இந்த வேலை எடுத்துக் கொண்ட நாள் முதல் ராஜகோபாலை பார்த்தது நந்தினி வீட்டுக்கு வந்தது அமைச்சர்கள் கொலையானது ராதிகா வந்தது போலீஸ் அவனை விசாரனை செய்தது அவன் அடிப்பட்டது என்று கோர்வையில்லாமல் அவன் மனதில் அனைத்தும் வந்து போயின. டக்கென்று ஒரு விளக்கு அடித்தது. ஒரு அதிகாரி வந்து உங்களை பார்க்க உங்க கொலீக் நந்தினியும் உங்க வேலைக்காரன் ரங்கனும் ... Read More »
கடைசி பேட்டி – 14 ( மர்மத் தொடர் )
April 24, 2015
ரங்கன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனாள் நந்தினி. அவன் நடுரோட்டில் காலில் விழுந்துதும் அவனை அருகில் உள்ள தேனீர் கடைக்கு அழைத்துச் சென்றாள். தேனீர் வாங்கித்தந்தாள். அமைதியாக என்னாச்ச அண்ணே என்றாள். அம்மா தம்பியோட நான் பல வருஷம் இருக்கேன். எனக்கு பொண்டாட்டி கெடையாது. பல வருஷம் முன்னாலேயே செத்துப் போச்சு. ஒரே புள்ளை. அவனை என் மச்சினிதான் வளத்துகிட்டு இருக்கா. என் வீட குரோம்பேட்டை ராதா நகர்கிட்ட இருக்கு. மச்சினியும் அவ புருஷனும் என் சொந்த ... Read More »
கடைசி பேட்டி – 13 ( மர்மத் தொடர் )
April 24, 2015
மீடியாவில் இருப்பதால் அவனை மரியாதையாகவே நடத்தினர் போலீஸார். அவனுக்கு தேனீர் கொடுத்துவிட்டு இரண்டு இட்லியும் கொடுத்தனர். பிறகு ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே உயர் அதிகாரிகள் மூன்று பேர் இருந்தனர். காவலும் இன்று கார்ப்ரேட் லுக்கில் தான் இருக்கிறது என்று நினைத்தான் ராஜேஷ். பெரிய கான்பரென்ஸ் ரூம். ப்ரொஜெக்டர். மைக் ஸ்டீரியோ வெள்ளை போர்ட் ஃபிலிப் சார்ட் வீடியோ என்று கலக்கியது காவல். சொல்லுங்க ராஜேஷ் எதுக்கு அமைச்சர் நீலவாணனை கொன்னீங்க? என்ன சார் சொல்றீங்க? ... Read More »
கடைசி பேட்டி – 12 ( மர்மத் தொடர் )
April 24, 2015
இன்று சக்களத்தியை விடக்கூடாது நானே அவனோடு லஞ்சுக்கு போவேன் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ்சுக்கு வந்தாள். வழக்கமாக நிறுத்தும் இடத்தில் அவன் வண்டியில்லை. ஆனாலும் பரவாயில்லை எப்போதாவது தான் அவளுக்கு முன்னால் வருவான். பாவம் செல்லம் ராத்திரி முழுக்க வேலை செஞ்சிருக்கும் என்று குழந்தையைப் போல தனக்குத்தானே பேசிக்கொண்டாள். தலை குளித்த ஈரமாக இருந்த கூந்தல். பெண்கள் தலை குளித்தாலே ஒரு அழகுதான். அதுவும் நன்றாக துடைத்த பிறகும் விட்டுப் போன சில நீர் துளிகள் சாவகாசமாய் ... Read More »
கடைசி பேட்டி – 11 ( மர்மத் தொடர் )
April 24, 2015
8.30 மணிக்கு வீடு சென்றவன் மேசையின் மேல் உள்ள காகிதத்தில் 2 என்று எழுதிவிட்டு குளியலறைக்குச் சென்றான். குளியலறையையும் ரசித்துக் கட்டியிருந்தான். பெரிய அறை. ஒரு புறம் பெரிய கண்ணாடி. சின்ன டேபிள். அதன் மேல் சில புத்தகங்கள். நடிகை சோனாலி பிந்த்ரேயின் கவர்ச்சி போஸ்டர். காலடிகள். பெரிய டப். நீல வண்ண டைல்ஸ் ஒரு கடல் போல தோற்றத்தை அளித்து. வெள்ளை டப் மற்றும் வசதி சாதனங்கள் விலை உயர்ந்த பீங்கானில். சிறிய தொங்கும் பெட்டியில் ... Read More »
கடைசி பேட்டி – 10 ( மர்மத் தொடர் )
April 24, 2015
தொடர்ந்து நந்தினியை தாண்டி வெளியே செல்லும் முன் தன்னுடைய வேகத்தை குறைத்து ராதிகாவை முன்னே செல்லவிட்டு தான் கிறுக்கி வைத்திருந்த போஸ்ட் இட்டை அவள் பார்க்கும் போது அவளுடைய போன் போர்ட் மீது ஒட்டிவிட்டு லிப்டுக்குள் நுழைந்தான். அதை படித்ததும் அவளுக்கு தலைசுற்றியது. இந்த ரோஜா வாடக்கூடாது. அதை கை நடுங்க எடுத்தாள். தன் முகம் வாடியிருந்ததை அவன் பார்த்திருக்கிறான். மெதுவாக அதை முத்தம் இட்டாள். டாய்லெட் ஓடிச்சென்று 100 முறை படித்தாள். அம்மாவுக்கு போன் செய்தாள். ... Read More »
கடைசி பேட்டி – 9 ( மர்மத் தொடர் )
April 24, 2015
முட்டிக்காலுக்கு சற்றுக்கீழ் வரும் அளவுக்கு ஒரு லெதர் கருப்பு ஷூ. கருப்பு நிறத்தில் ஒரு ஸ்கர்ட். பிரவுன் நிறத்தில் ஒரு டீ ஷர்ட். கையில் கடிகார அளவில் ஒரு லெதர் பாண்ட். கழுத்தில் ஒரு ஸ்கார்ப் வெள்ளை நிறத்தில். அலையாக பறக்க விடப்பட்ட தலை முடி. முகத்தில் பொட்டு இல்லை. உதடுச் சாயம் இல்லை. கண்களில் அந்த துறுதுறுப்பு. டீ ஷர்ட்டின் முதல் இரண்டு பட்டன்கள் அலட்ச்சியமாக திறந்துவிடப்பட்டிருந்தன. பப்பிள்கம் மென்றுக்கொண்டிருந்தாள். இது ராதிகா. சூப்பர் டிவியில் ... Read More »