மே 2ஆம் தேதி திங்கட்கிழமை. அமுதாவின் கண்கள் தூக்கத்தை தொலைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. குணசீலனும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தான். அமுதாவின் சொந்த ஊரில் இருந்தே, நேராகத் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ஊட்டி செல்வது என்பது குணசீலனின் பிளான். ஊட்டிக்குப் போய்ச் சேர்வதற்குள் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிடும் என்பதால் புளியோதரைச் சாப்பாட்டைத் தயார் செய்யப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அமுதாவின் அம்மா பாக்கியம். அவளை நெருங்கி வந்தான் குணசீலன். “அத்த… மதியச் சாப்பாடு எல்லாம் ரெடி ... Read More »
Monthly Archives: April 2015
இரண்டாம் தேனிலவு – 7
April 1, 2015
ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ஈரோட்டில் நடந்த திடீர் களேபரத்திற்குப் பிறகு ஆனந்த், ஷ்ரவ்யா இருவரும் அதிகம் பேசாமல் மவுனமாகவே கோவை எக்ஸ்பிரஸில் பயணித்தனர். மணி இரவு பத்தைக் கடந்த சிறிது நேரத்தில் கோவை நகருக்குள் பயணித்தது ரெயில். “ஷ்ரவ்யா…” அதுவரை அமைதியாய் ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போய் இருந்த ஷ்ரவ்யாவை தனது குரலால் எழுப்பினான் ஆனந்த். “கூப்பிட்டீங்களா?” ஷ்ரவ்யா கேட்டாள். “ஆமா… நாம கோவை வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல ரெயில்ல இருந்து இறங்கணும். அதான் கூப்பிட்டேன்.” ... Read More »
இரண்டாம் தேனிலவு – 6
April 1, 2015
வெள்ளைச் சுவற்றில் நின்று கொண்டே ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா. மணி, இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நேரம் பெட்ரூம் முழுக்க பூக்களை கொட்டி பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பாளே அம்மா… அப்படியொரு சம்பவத்தை நடக்க விடக்கூடாதே… என்று மனதிற்குள் பரபரப்பானாள் அமுதா. ஒருவேளை குணசீலன் தன்னை கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. தனக்கு ஏற்பட்ட இப்படியொரு நிலை, காதலித்துக் கொண்டிருக்கும் வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் தன் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 5
April 1, 2015
“பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க…” ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ் ஆர்வமாக காத்திருந்தான். ‘நான்தான் இந்த பார்ட்டியை உனக்காக ஸ்பெஷலா ஏற்பாடு செய்து கொடுத்தேன். பணத்தைத் தாராளமா செலவு செய்யக்கூடிய பார்ட்டிதான். அவன் உனக்காகத் தந்த பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து விடு’ என்று, தன் மனதிற்குள் உள்ள விஷயத்தை சொல்லத் தயாராக ... Read More »
இரண்டாம் தேனிலவு – 4
April 1, 2015
பகல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள் அழகான இயற்கை ஓவியத்தை வரைந்து விட்டிருந்தது.இப்படி, இயற்கை வீட்டிற்கு வெளியே வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க… வீட்டிற்கு முன்பு வந்து நின்ற டாடா இன்டிகா காரின் ஹாரன் சப்தம் கேட்டு வேகமாக வந்தாள் பாக்கியம். ... Read More »
இரண்டாம் தேனிலவு – 3
April 1, 2015
திருவள்ளூரைக் கடந்து அரக்கோணம் நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது சென்னை – கோவை எக்ஸ்பிரஸ். சேலையில் ஊட்டி ரோஜாவாய் மலர்ந்திருந்த ஷ்ரவ்யாவை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தான் ஆனந்த். “ஷ்ரவ்யா… இந்த ரோஸ் கலர் சாரியில் நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க.” “உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்ல… ஏதாவது பேசணுமேங்றதுக்காக இப்படிச் சொல்றீங்களா?” “அப்படியெல்லாம் இல்லீங்க. என் மனசுல பட்டதத்தான் பேசுறேன்.” “மனசுல இருந்து பேசுறேன்னு சொல்றீங்க. அப்போ நான் உலக அழகியாகத்தான் இருக்க முடியும்.” “என்னங்க… நீங்க ... Read More »
இரண்டாம் தேனிலவு – 2
April 1, 2015
மவுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங். “அம்மாடி… இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?” அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து விடுவது போல் பேசினாள் அவளது அம்மா பாக்கியம். அமுதாவிடம் இருந்து மவுனமே பதிலாக வந்தது. “ஆயிரத்தெட்டு பிரச்சனைங்க, மனஸ்தாபங்க இருந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுதான் வாழணும். ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட பிறகு இப்படி குத்துக் கல்லாட்டம் பொறந்த ... Read More »
இரண்டாம் தேனிலவு – 1
April 1, 2015
மதியம் 1.30 மணி – சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள். ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடி க்கொண்டிருந்தது. “பயணிகளின் கனிவான கவனத்திற்கு…” ... Read More »