Home » 2015 » April » 25 (page 3)

Daily Archives: April 25, 2015

கறுப்பு வரலாறு – 16

தஞ்சையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வந்து தங்கினான். ரகுவை தனியாக பிடித்து விவரங்களை அறிந்துக் கொண்டான். ரவியை தனியாக சந்தித்து பேசினான். ரவியிடம் கரிகாலனை கண்காணிக்கும் பணியில் அமர்த்தினான். உணவகத்தில் தனியாக சவிதாவைப்பிடித்தான். அவளிடமும் பேசினான். நீலாவை லிப்டில் பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினான். பழனியப்பனிடமும் கரிகாலனிடமும் பேசவில்லை. அவன் வந்த்து அவர்கள் இருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னான். இருவரையுமே சந்தேகிப்பதாகவும் இருவருக்கும் நான் இங்கிருக்கும் விவரம் தெரியக் கூடாது என்றும் கூறினான். ... Read More »

கறுப்பு வரலாறு – 15

அழகான இந்தியில் பேசத் தொடங்கினார் பாஸ்கர் பாராஷேர். ரமஷின் மேலதிகாரி. ரமேஷ் வளர்ந்த நாடுகள் நம் நாட்டில் அதிகம் உளவு செய்யும் பகுதிகளை அறிந்திருக்கறீர்களா. ஆமாம் சார். நாட்டில் எங்கே பெட்ரோல் கிடைக்கிறது என்பது நம் அரசாங்கத்தைவிட முதலில் அவர்களுக்கு கிடைக்கிறது. அது போல அணு ஆயுத சோதனைகள், வைரம், தங்கம், ராணுவ ஒப்பந்தங்கள், அரசியல் மாற்றங்கள், மதவாதத்தினால் மாற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்கள், எங்கெல்லாம் தீவிரவாதம் ஊடுருகிறது என்றெல்லாம். சரி தான் ரமேஷ். அந்த பட்டியலில் தமிழக ... Read More »

கறுப்பு வரலாறு – 14

மத்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ் கடிகாரத்தை பார்த்தான். 45 நிமிடம் ஓடியிருந்தான். வழக்கமான நேரம் தான். ஆனால் வழக்கமான தூரம் இல்லை. மிக தொலைவில் வந்திருந்தான். செல்பேசியை எடுத்து மனைவி ஜெயாவை அழைத்தான். பிக் மீ அப் என்று விட்டு வைத்தான். மெதுவாக கடலோரத்தில் இருந்த மணல்வெளியில் தன் வெற்று கால்களை பதித்தான். நீலாங்கரை கடல் அன்று மிக அழகாக நீலமாக காட்சியளித்தது. செல்பேசி ஒலித்தது. டீக் ஹெய். தீஸ் மின்டோமே பஹூஞ்ச் தான் ஹூன் என்று ... Read More »

கறுப்பு வரலாறு – 13

எனக்கு ஒரு குழப்பமாகவும் பயமாகவும் இருக்கு. நீங்க தான் தஞ்சை காவல்துறையிடம் சொல்லி எங்களுக்கு பாதுகாப்பு தரணும். ஏன்னா என்னை நம்பி பெற்றோர்கள் அவங்க பிள்ளைகளை ஒப்படைச்சிருக்காங்க. நன்றி. அவசியம் சொல்றேன். இன்னொரு புறம் நடக்கும் பேச்சுக்களை கேட்காமல் குழப்பான சூழ்நிலையில் ஒரு தொலை பேசி பேச்சு மேலும் குழப்பத்தையே தரும். அதை புரிந்துக் கொண்ட பழனியப்பன் தன்னுடைய இரு மாணவர்களுக்கும் விளக்கினார். வணக்கம் பழனியப்பன். உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. சங்கரோட பிரேத பரிசோதனை அறிக்கை ... Read More »

கறுப்பு வரலாறு – 12

சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் என்றான் ரகு பழனியப்பனின் அறைக்கு வந்து. உட்காரு ரகு. சொல்லு என்றார். சார், சுற்று முற்றும் பார்த்தவிட்டு தொடர்ந்தான். சார், அன்னிக்கு தம்பிரான் கிட்டேர்ந்து அவர் எழுதின கட்டுரை வாங்கி படிச்ச உங்களோட முகம் இறுகி போயிட்டுத்தே எதுக்கு. ஹா ஹா, ஐந்து சின்ன பசங்களை கூட அழைச்சிகிட்டு வந்திருக்கேன்னு நினைச்சேன். ஆனா நீங்கள் எல்லாருமே புத்திசாலி பசங்கத்தான். ஒரு ஓவியனுக்கு கவனித்தல் தான் ஆயுதம். அந்த திறமை உன்கிட்டு ... Read More »

கறுப்பு வரலாறு – 11

மறுநாள் காலை சிற்றுண்டியில் சந்தித்தனர் அனைவரும். கரிகாலனும் சவிதாவும் மௌனமாக இருக்க, அனைவரும் கதையளத்துக் கொண்டிருந்தனர். பழனியப்பன் சவிதாவைப் பார்த்து ஞானப்ரகாசம் சார் கொடுத்த பக்கங்களையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏத்திட்டியா என்றார். இல்லை சார். நேத்து உடம்பு சரியில்லை என்றாள். பரவாயில்லை இன்னிக்கு பண்ணு. சார் மாத்திரை வாங்கனும். நானும் ரவியும் போயிட்டு வரட்டுமா. அவருக்கு இவர்கள் நடுவில் நடக்கும் காதல் கதை தெரியும். எதுவும் தப்பதண்டா நடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். சரி. ஆனால் 30 நிமிடத்துக்குள் ... Read More »

கறுப்பு வரலாறு – 10

தஞ்சையிலேயே ஒரு விடுதியில் அறையெடுத்தனர். இரவு உணவுக்கு சேர்ந்த அனைவரும் களப்பிறர் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். டேய் ரவி களப்பிறர் நூறு பேரை வென்ற பல்லவன் வழி வந்தோனே அப்படின்னா மொத்தம் 100 பேர் இருந்தாங்க அப்படித்தானே அர்த்தம் என்றான் ஏதோ கண்டுபிடித்த மாதிரி ரகு. இல்லை ரவி, இதை பல வழிகள்ல பார்க்கனும். 1. நூறு பேரை வென்ற ………கவிஞர்கள் பாடும் போது நூறு யானைகளை கொன்ற, நூறு புலிகளை அடக்கிய அப்படின்னு சொல்வாங்க. ஆனா ... Read More »

கறுப்பு வரலாறு – 9

போலீஸ்க்கு சொல்லி அனுப்பி மூன்று மணி நேரத்திற்கு பிறகு வந்தது. ரவி யாரும் சங்கர் வீட்டில் சொல்ல வேண்டாம் என்றும் உடலை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்ற பிறகே தகவல் சொல்லலாம் என்று சொல்லிவிட்டான். போலீஸும் பிரேத பரிசோதனை நடத்தி தகவலை சென்னையில் தெரிவிப்பதாக கூறினர். அனைவரும் அவன் பம்பு செட்டில் குளிக்க முயன்றிருக்கலாம் என்றும் அதனால் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று முதல் சோதனையில் முடிவுக்கு வந்திருந்தனர். அதனால் அதிக விசாரனை எதுவும் நடக்கவில்லை. அனைவரும் ... Read More »

கறுப்பு வரலாறு – 8

கரிகாலன் வந்து வண்டியை அந்த கிராம வீட்டின் முன் நிறுத்தினார். ரகு வெளியே வந்து பொட்டலங்களை கையில் வாங்கியபடியே சங்கர் எங்க சார் என்று கேட்டான். அவனாப்பா அவன் கிராமத்து வெளியிலே இறங்கிட்டான். வயல் வரப்புல நடந்து வர ஆசைன்னு சொன்னான். வந்திடுவான். நீங்கள்லாம் சாப்பிடுங்க என்றார். அனைவரும் சிதம்பரத்தின் ருசியான உணவை உண்டு மகிழ்ந்தனர். பிறகு தம்பிரானை காண தயாரகினர். பழனியப்பன் வந்து, எங்கப்பா இந்த சங்கரு. தம்பிரான் ஐயாவை பார்க்க நேரமாகுதுல்ல என்றார் சலிப்புடன். ... Read More »

கறுப்பு வரலாறு – 7

அதிகாலையில் வண்டி சிதம்பரத்தை தாண்டி ஒரு குக்கிராமத்தில் சென்று நின்றது. பேராசிரியர் தம்பிரான் அவர்களுக்காக ஒரு கிராம வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய பணியாள் அவர்களை தங்கவைத்துவிட்டு குளித்து முடித்துவிட்டு சுமார் 11 மணிக்கு வந்தால் தம்பிரனை பார்க்கலாம் மதியம் உணவு அங்குதான் என்று சொல்லிச் சென்றார். இரவு முழுவதும் உட்கார்ந்தே வந்ததால் அனைவரும் களைத்திருந்தனர். தம்பிரான் இவர்கள் காலை சிற்றுண்டி முடித்துவிட்டதாக நினைத்துவிட்டார் போலும். அனைவரும் கிணற்றடியில் குளித்து மகிழ்தனர். அந்த அதிகாலை கிராமப்பொழுது மிகவும் ... Read More »

Scroll To Top