அடையாறு வந்து சேர்ந்ததும் நன்றாக ஓய்வெடுத்தனர் இருவரும். பிறகு நேராக வங்கிக்கு சென்றான் ரமேஷ். தன்னிடமிருந்த வங்கி கணக்குகளின் விவரங்களை காட்டி அவர்களுடயை விவரங்கள் வேண்டும் என்று கேட்டான்.
வழக்கமாக மறுத்த வங்கியினர் உளவத்துறை என்றது பேசாமல் எடுத்து கொடுத்தனர்.
பட்டியலில் அதிக நேரம் செலவிடாமல், நேராக திருவான்மயூரின் அந்த வீட்டில் வண்டியை நிறுத்தினான். உள்ளே சென்ற சில நிமிடங்களில் ஒரு மனிதரை அழைத்துக் கொண்டு நேராக பேராசிரியர் சந்திரசேகரின் வீட்டிற்கு சென்றான்.
செல்பேசியில் தொடர்பு கொண்டு ரவி, ரகு, நீலா, சவிதா மற்றும் பழனியப்பனை சந்திரசேகர் வீட்டிற்கு வரச் சொன்னான்.
சிதம்பரம், தஞ்சை மற்றும் மதுரை காவல் துறைகளுக்கு தகவல் சொன்னான். பாஸ்கர் பராஷருக்கும் தகவல் சொன்னான்.
ஜெயாவை அழைத்து விவரத்தை சொன்னான். ஐ காட் மை மான் பேபி என்றான். யூ ஆர் த பெஸ்ட் என்றாள் ஜெயா.
அனைவரும் சந்திரசேகர் வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து விட்டு அந்த மனிதரை தன் வண்டியிலிருந்து உள்ளே அழைத்து வந்தான்.
நேராக பேராசிரியர் சந்திரசேகரை பார்த்து, ப்ரோபஸர் எஸ். சந்திரசேகர், மீட் மிஸ்டர் எஸ். சந்திரசேகர், சீனியர் ஆபீஸர், ஆர்கியாலாஜிக்கல் டிபார்மென்ட் ஆஃப் இண்டியா.
தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் உயர் அதிகாரியாக இருந்துகிட்டு கள்பிறர் ஆராய்ச்சி பண்றதாகவும் டாக்டர் பட்டத்துக்கு ஆராய்ச்சி பண்றதாகவும் சொல்லி தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து கிடைக்கும் தொல்பொருட்களை விற்று நம் நாட்டுக்கே துரோகம் செய்து குற்றத்துக்காகவும், கரிகாலன் மூலமாக சங்கரை கொலை செய்து குற்றத்துக்காகவும் நான் உங்களை கைது பண்றேன் என்று சொல்லிவிட்டு, சென்னை காவல் அதிகாரியை பார்த்து அவர் இனிமே உங்க பாடு என்று சொல்லிவிட்டு பழனியப்பனையும் அவருடைய மாணவர்களையும் பார்த்தான். அவர்கள் அவனை புன்னகையோடு பார்த்தார்கள்.
அன்று டிசெம்பர் 31. சந்திரசேகர் எனும் வரலாற்று பேராசிரியர் மீது இருந்த தூசி மறைந்த நாள்.
சந்திரசேகர் நன்றி பெருக்கோடு ரமேஷை பார்க்க மாணவர்களும் பழனியப்பனும் அவரை சந்தேகப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
கறுப்பு அகன்று மகிழ்ச்சி பொங்கியது.
சுபம்.