காவல் வாகனம் அவளைக் கடந்து சென்றதையும் அதில் ரமேஷ் இருப்பதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்று யூகித்தாள்.
பாஸ்கர் பராஷரை உடனடியாக செல்பேசியில் தொடர்பு கொண்டாள். அவரும் அமைதியாக, சரி நீங்கள் ஓட்டலுக்கு போங்க. அவர் வருவார் என்று சொல்லிவிட்டு வைத்தார்.
தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்றாலும் அவளால் முடியவில்லை.
எப்படி உங்களுக்கு குண்டடி பட்டிச்சி.
ஹா. எதுக்கு இப்ப அதை கேட்கறே.
சொல்லுங்க ரமேஷ்.
அதுவா. அது எங்க தொழில்ல சகஜம் ஜெயா.
சொல்லுங்க.
எதுக்கு வேண்டும் உனக்கு அந்த விவரம்.
சொல்லுங்க. இல்லாட்டா உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
ஒ. அப்படி சொல்லாதே பெண்ணே. சொல்றேன். சென்னை துறைமுகத்திலே இரண்டு கோஷ்டிகள் உருவாயிடுத்து. நிறைய கடத்தல் பொருட்கள். அரசாங்கத்தை மானவாரியாக ஏமாத்திகிட்டு திரிஞ்சாங்க. உள்ளூர் காவல் அவர்களிடமே சாப்பிட்டு கொழுத்துட்டாங்க. அவங்களால பிடிக்க முடியாதுன்னு மத்திய உளவுத்துறைக்கு மாத்திட்டாங்க. யாருமே இந்த கேஸை எடுத்துக்கலை. நான் அப்பத்தான் புதுசா சேர்ந்திருந்தேன். ரொம்ப தைரியமா செய்யறேன்னு எடுத்துகிட்டேன்.
21 பேரை கண்டுபிடிச்சி அரஸ்ட் பண்ணேன். 3 பேரை கொன்னேன். கடைசியில் ஒருத்தனோட நேரடியா மோதவேண்டியதாயிடுத்து. 4 மணி நேரம் அவன் சுட்டுக்கிட்டே இருந்தான். நான் இரண்டு குண்டுதான் சுட்டிருப்பேன். இன்னும் அனுபவ முதிர்ச்சி இருந்திருந்தா எனக்கு குண்டடி பட்டிருக்காது. பசிக்க ஆரம்பிச்சிடுத்து. இருட்ட ஆரம்பிச்சிடுத்து. ஆனது ஆகட்டும்னு நேரா அவன்கிட்டே நடந்த போனேன். அவன் சுட்டான். என் மேல பட்டுது. நான் அவனை நெத்தியிலே சுட்டுட்டேன். அவ்வளவுதான்.
அடப்பாவி கொலையெல்லாம் பண்ணியிருக்கீங்களா.
ஆமாம். ஆனா அந்த குண்டடி பட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
என்ன.
ஆமா இல்லாட்டி இந்த செல்லப் பெண் கிடைச்சிருப்பாளா எனக்கு.
அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. கண்ணீரை கட்டுபடுத்திக் கொண்டு ட்யூப் பிடித்த ஸ்டேஷனில் இறங்கி ரெஸிடென்ஸிக்கு சென்று அறைக்கு சென்றடைந்தாள்.
தொடரும்…