மறுநாள் காலையில் எழுந்தவன் ஜெயாவை சௌத்தாலில் இருக்கும் அவளுடைய மாமவின் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு ட்யூப் ரயிலை பிடித்து லண்டன் பிரிட்ஜ் வந்து இறங்கினான். லண்டனின் சிறப்பே இந்த ட்யூப் தான். ஒடிச் செல்லும் மனிதர்கள், அனைத்து நிறம், இனம், மொழி. லண்டனில் உயிர் இல்லை என்றால் உயிருக்கே உயிர் இல்லை என்று பொருள் என்றோ எங்கோ படித்ததை நினைத்துக் கொண்டான்.
தி ஆப்ஸென்ட் மைன்ட் எனும் புத்தகத்தை வாங்கினான். ஒரு பெரிய கலத்தில் காபியை ஒன்னரை பவுன்ட் கொடுத்து வாங்கிக் கொண்டு முகவரி தேடி அந்த வீட்டின் எதிரே உள்ள பூங்காவில் சென்று அமர்ந்தான்.
ஒரு மணி நேரத்தில் சுமார் 120 பக்கங்கள் படிக்கும் திறன் கொண்ட அவன் 2 மணி நேரத்திலேயே அந்த புத்தகத்தை முடித்துவிட்டான். ஆனால் அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வீட்டில் அசைவுகள் இல்லை.
சட்டென்று ஒரு காதித்தை எடுத்து அதில் அந்த புத்தகத்தில் இருந்த கடையின் முகவரியை எழுதினான். அந்த புத்தகத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டான். பிறகு நேராக அந்த வீட்டிற்கு சென்றான். கதவைத் தட்டினான்.
ஒரு ஐம்பது வயது மனிதர் கதவைத் திறந்தார்.
வாட் டு யூ வான்ட் என்றார் அவன் வந்ததை சற்றும் விரும்பாதவராய்.
சுத்தமாக ஆங்கிலம் தெரியாதவன் போல் ஏதேதோ உளறினான். மெதுவாக நோட்டம் விட்டான். இது வீடு இல்லை. ஏதோ ஒரு அலுவலகம். காமிரா இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. கடைசியாக எப்படியோ தனக்கு அந்த காகிதத்தில் உள்ள முகவரிக்கு போகவேண்டும் என்பதை அவருக்கு புரியவைத்தான்.
அவரும் வழக்கமான ஆங்கில வார்த்தைகளில் அவனை திட்டிவிட்டு வழி சொல்லி கதவை சாத்தினான்.
ஆஹா, நல்ல புத்தகம். ஜெயாவுக்கு ரொம்ப பிடிக்கும். சரி இன்னொன்னு வாங்கிக்கலாம் என்று எண்ணியபடியே லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உலாற்றினான். ஒரு பெரிய அரங்கம் கண்ணுக்குத் தென்பட்டது. 25 பவுன்ட் டிக்கெட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான்.
மேடை நாடகம் நடந்துக் கொண்டிருந்தது. கதை முழுவதும் ஒருவனை ஒருவள் காதலிக்கிறாள். அதை ஜவ்வுமாதிரி இழுத்துக் கொண்டிருந்தார்கள். நன்றாக ந்டிக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரியும் படி நடித்துக் கொண்டிருந்தார்கள். சே, நம்ம ஊர் மேடை நாடக நடிகர்கள்கிட்டேர்ந்து இவங்க நடிப்பை கத்துக்கனும் என்று நினைத்துக் கொண்டான். எதிர்பாராத விதமாக தான் காதலித்தவனை மணக்காமல் வேறு ஒருவனை மணந்துவிடுகிறாள். சரிடா புதுக்கதையா எதாவது சொல்லுங்க என்றுவிட்டு வெளியேறினான்.
மணி 4.30 இன்னும் 1.30 மணி நேரம் ஓட்டவேண்டுமே. சரி, என்றுவிட்டு இன்னொரு புத்தகம் வாங்கினான். மாஸ்டர் மைன்ட் – தி ஸ்டோரி ஆஃப் எ காஃப். நம்ம சமாச்சாரமாச்சே என்று ஒரு ஒரத்தில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான்.
சாதாரணமாக நம்ம ஊர் கான்ஸ்டபிள்கள் செய்யும் வேலைகளை கதையின் நாயகன் செய்துக் கொண்டிருந்தான். சிரித்துக் கொண்டே, நமக்கு நம்ம ஊரை பத்தி கர்வம் தான் என்று படித்து முடித்த புத்தகத்தை தூக்கி எரிந்துவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினான். குளிர ஆரம்பித்தது. இருட்ட ஆரம்பித்தது.
நேராக தான் கண்காணித்துக் கொண்டிருந்த வீட்டிற்குச் சென்றான். அங்கே பிராக்ஸிமிடி ரீடர் போட்ட கதவு இருந்தது. பிரத்யேகமான அட்டையிருந்தால் மட்டுமே அதை திறக்க முடியும். மாறிவரும் கணினி காலத்தில் பாதுகாப்புகளும் புதுவகையாக மாறியிருந்தன. என்ன செய்வது என்று யோசித்தான்.
பிறகு மீண்டும் லண்டன் பிரிட்ஜ் ட்யூப் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த ஒரு எலக்டிரானிக்ஸ் கடையில் வெற்று ஸ்மார்ட் கார்டுகளும் சின்ன யூஎஸ்பி ப்ரோகிராமரும் வாங்கி அங்கிருந்த ஒரு இணைய தொடர்பு நிலையுத்துக்குள் நுழைந்தான். அங்கிருந்த ஒரு கணினியில் அந்த அட்டையை இணைத்து மென்பொருள் திறந்து ஏதோ செய்தான். பிறகு பணம் கொடுத்து விட்டு மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தான். சகஜமாக அந்த அட்டையை நுழைத்து தன்னிடமிருந்த கைகடிகாரத்தின் மூலம் சில கமாண்டுகளை தட்டினதும் அந்த கதவு பச்சைவிளக்கு காட்டி திறந்துக் கொண்டது.
உள்ளே நுழைந்த அவனுக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது.
தொடரும்…